வீட்டு வாயில் இவ்வாறு இருந்தால் பணம் பெருகுவது உறுதி, சொல்கிறது வாஸ்து .!

வீட்டு வாயில் இவ்வாறு இருந்தால் பணம் பெருகுவது உறுதி, சொல்கிறது வாஸ்து .!

Update: 2020-12-09 05:45 GMT

வீட்டின் அனைத்து பகுதிகளுமே முக்கியமானது தான் என்ற போதும். வீட்டின் வாயில் மிக மிக முக்கியமானது. வீட்டின் வாயில் எத்தனை சுத்தமாகவும், புனிதமாகவும் அமைகிறதோ அதற்கேற்றார் போன்ற பலன்களை நாம் நிதர்சனத்தில் உணர்ந்திருக்க முடியும்.

வீட்டில் பூஜைகள் செய்யும் பொழுது, வீட்டு வாயிலுக்கும் பூஜை செய்யும் நம் வழக்கத்தின் மூலமே, வீட்டு வாயில் எத்துனை முக்கியமானது என்பதை  நாம் அறிந்து கொள்ளலாம். வீட்டின் பூஜைகளின் போது வீட்டு வாயிலில் திருஷ்டி பூசணி துவங்கி எலும்பிச்சை மற்றும் கற்பூர ஆரத்தி என பல்வேறு விதமான சடங்குகள் செய்வது வழக்கம். இந்த அடிப்படையில் வீட்டு வாயிலில் வாஸ்து சாஸ்திரப்படி பின்வருபவற்றை வைப்பதன் மூலமாக, சில நன்மைகள் நடக்கும் என சொல்லப்படுகிறது.

வீட்டில் சாத்தியங்கள் இருந்தால், வீட்டு வாசலில் கண்ணாடி குடுவையில் புதிய நீர் நிரப்பி, அன்று மலர்ந்த மலர்களை வைப்பது மிகவும் நல்ல அதிர்வுகளை வீட்டிற்குள் ஈர்க்கும். மஞ்சள் தோய்த்த நூலில், அரச மர இலை அல்லது மாமரத்து இலை அல்லது அசோக மரத்து இலையை கொண்டு தோரணம் செய்து, வீட்டு வாயிலில் கட்டினால் அவை வீட்டினுள் தீய சக்திகளை அண்டவிடாது என்பது ஐதீகம். அதே வேளையில், அந்த இலைகள் காய்ந்து சருகாக மாறும் போது, அந்த தோரணத்தை மாற்றிவிட வேண்டும்.

சிலர் வீட்டு வாயிலேயே காலணி இடத்தை  வைத்திருப்பார்கள். காலணிக்கான இடத்தை வாயிலிலிருந்து சாத்தியமான தூரத்தில் வைத்தல் நலம். மேலும் செல்வத்தையும் வளத்தையும் பெருக்கும் லட்சுமிதேவியின் படத்தை வீட்டு வாயிலில் வைப்பது நன்மை தரும்.

வீட்டு வாயிலில் சுவஸ்திக் சின்னம் பதித்த சுபம் லாபம் எனும் சின்னத்தை வைப்பதால் வீடு மற்றும் தொழில் நடக்கும் வாயில்களில் நல்ல மாற்றங்கள் நிகழும் என்பது நம்பிக்கை. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் வாயில் கதவான பிரதான கதவு பெரிதாகவும், மற்ற கதவுகள் சிறிதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

இரு ஜோடி கதவுகள் கொண்ட அமைப்பிலான கதவுகளை வாயிலுக்கு பயன்படுத்தினால், கதவு உள்பக்கமாக திறக்குமாறு இருத்தல் மிகவும் நல்லது என சொல்லப்படுகிறது. நல்ல மரத்தினாலான கதவாகவும், க்ரீச் அல்லது மற்ற சப்தத்தை ஏற்படுத்தாத கதவாகும் அது இருக்க வேண்டும்.

மாலை நேரத்தில், வெளியே இருப்பவர்களால் நம் வாயிலை பார்க்க கூடிய அளவிலான் முறையான வெளிச்சத்துடன் நுழைவு வாயில் இருக்க வேண்டும்.           

Similar News