கோவில்களில் தேர் ஓட்டம் நிகழ்வது ஏன்? காரணமாக இருக்கும் ஆச்சர்ய கோவில்

Update: 2022-12-14 00:30 GMT

தமிழகத்தில் மயிலாடுதுறையில் திருவிற்குடி பகுதியில் அமைந்துள்ளது விரட்டீஸ்வரர் கோவில். இத்தலத்தை திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் என்றும் அழைப்பர். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த தலத்தில், மூலவரின் பெயர் வீரட்டீஸ்வரர் என்பதாகும். மேலும் தேவாரம் பாடப்பெற்ற 276 ஸ்தலங்களுள் இத்திருத்தலமும் ஒன்றாகும்.

இக்கோவில் சோழ சாம்ராஜ்ஜியத்தில் கட்டப்பட்டு, பிற்காலத்தில் தஞ்சாவூர் நாயக்கர்களால் விரிவுப்படுத்தப்பட்டது. தற்போது இக்கோவில் தர்மபுர ஆதினத்தால் பராமரிக்கப்பட்டும், நிர்வகிக்கப்பட்டும் வருகிறது.

சிவபெருமான் எட்டு விதமான அரக்கர்களை வதம் செய்தார் என்றும், அந்த எட்டு சம்ஹாரங்களை குறிக்கும் விதமாக எட்டு கோவில்கள் அமையப்பெற்றன என்பதும் வராலாறு ஆகும். அந்த எட்டு கோவில்களின் வரிசையில் ஜலந்தரா என்ற அரக்கனை கொன்றதற்காக, அந்த வெற்றியை போற்றும் பொருட்டு இத்திருத்தலம் அமைக்கப்பட்டது என புராணம் சொல்கிறது. ஒருமுறை இந்திரனை வதம் செய்ய சிவபெருமான் நெற்றி கண்ணை திறந்த போது, இந்திரன் தன்னை காத்து கொள்ள சிவபெருமானை மன்றாடினான். அவன் வேண்டுதலை அவர் ஏற்றார். அப்போது நெற்றி கண்ணிலிருந்து இந்திரனை அழிக்க புறப்பட்ட நெருப்பு கடலிலி விழுந்து அந்த கனலில் இருந்து ஓர் அரக்கன் உருவானன்.

நீரிலிருந்து உருவாகி வந்தவன் என்பதால் அவனுக்கு ஜலந்தரன் என்ற பெயர். மேலும் சிவபெருமானின் நெற்றி கண்ணிலிருந்து உருவானவன் என்பதால் சிவபெருமானை தவிர வேறு யாராலும் அவனை அழிக்க முடியாது என்பதால் தேவர்கள் மற்ற கடவுளர்களை மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கினான். பின் சிவபெருமானே அவனை தேர் கொண்டு வதைத்தார் என்பதால். இன்றும் இக்கோவிலின் விமானம் தேர் வடிவில் இருப்பதை காணலாம். மேலும் கோவில்களில் தேர் ஓட்டம் நிகழ்வதும், தேர் திருவிழா நிகழ்வதும் இந்த சம்பவத்தின் பின்னனியில் தோன்றியது என்ற நம்பிக்கையும் உண்டு. மேலும் ஜலந்தரனை வதைத்தால் இவருக்கு ஜலந்தரவத மூர்த்தி என்ற மற்றொரு திருப்பெயரும் உண்டு.

இத்தலத்தில் சுப்ரமணியராக அருள் பாலிக்கும் முருக பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இத்திருத்தலத்தில் திருநாவுகரசருக்கு இறைவன் திருமண கோலத்தில் காட்சி தந்ததால், திருமண தடையிருப்போர் இங்கு வழிபட்டால் உடனே திருமணம் நிகழும் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News