சிறிய கோவில் ஆனால் இலட்சம் பக்தர்கள் தரிசிக்கும் அதிசய பாலாஜி ஆலயம்!

Update: 2021-03-02 00:15 GMT

சில்கூர் பாலஜி கோவில் இப்படி சொல்வதை விடவும் விசா பாலாஜி கோவில் என்றால் பெரும்பாலனவர்களுக்கு தெரியும். ஹைதராபாத்தில் இருக்கும் ரங்கரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது இக்கோவில். ஓஸ்மன் சாகர் கரையில் அமைதிருக்கும் இக்கோவில் நகரின் பழமையான கோவிலும் கூட.

ஐதராபத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் இக்கோவில் பல தனித்துவங்களை கொண்டது. முதலில் இக்கோவிலின் பெயர் காரணம், இந்த கோவிலின் மூலவர் விஷ்ணு பரமாத்வாவின் அம்சமான பாலாஜி என்றாலும் இவரை விசா பாலாஜி என்றே அழைக்கிறார்கள். காரணம், வெளிநாடு செல்ல விசா தேவைப்படுவோர்கள் இங்கே வந்து வழிபட்டால் உடனடியாக விசா கிடைப்பதாக சொல்லப்படுகிறது.



பல ஆண்டுகளுக்கு முன் ஒரு குறிப்பிட்ட மாணவர்கள் குழு அமெரிக்க செல்ல விசா விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த கோவிலில் வந்து வழிபடவே, அவர்களின் விசா மீண்டும் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் வெளிநாடு பறந்து சென்றுள்ளனர். இந்த விஷயம், படு வேகமாக ஊரெங்கும் பரவவே, விசா விண்ணபித்து காத்திருப்போர் பலரும் இந்த கோவிலுக்கு படையெடுக்க துவங்கினார். இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

இந்த விசா பெறுவதெற்கென இங்கே பிரத்யேக வழிபாட்டு முறையும் உண்டு, அதாவது பெறுவதற்கு முன்பு 3 முறை இந்த கோவிலை வலம் வந்து, தனக்கு விசா கிடைக்கப்பெற்றால் 108 முறை அல்லது 11 முறை கோவிலை சுற்றி வந்து பிரதக்‌ஷணம் செய்கிறார்கள். இந்த கோவிலை மதன்னா மற்றும் அக்கண்ணா ஆகியோர் கட்டியுள்ளனர். இவர்கள் பக்த ராமதாஸின் மாமா ஆவர்.



இன்றும் வாரம் தோறும் 75,000 முதல் இலட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருபவர்களில் பலர் ஐடித்துறையை சேர்ந்தவர்களாக, உயர்கல்வி கற்க வெளிநாடு செல்பவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலும் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அதிகம் கூட்டம் கூடுகின்றன.

இந்த கோவிலுக்கு இதை தாணி பல தனித்துவங்கள் உண்டு. இந்த கோவிலுக்கு என்று உண்டியல் கிடையாது. எந்தவிதமான நன்கொடைகளையும் இந்த கோவில் பெறுவது கிடையாது. முக்கியமாக மற்ற கோவில்களை போல, விஐபிகளுக்கென பிரத்யேக வரிசையோ அல்லது சிறப்பு வழிபாடுகளோ கிடையாது. இந்த கோவில் அரசின் கட்டுபாட்டுகுள் வராது, இந்த உரிமையை இந்த கோவில் போராடி பெற்றுள்ளது. இந்த வகையிலான கோவில் இந்தியாவில் வெகு சிலவே உள்ளன. உதாரணமாக குஜராத் விர்பூரின் ஜலராம் கோவில் மற்றும் ராஜஸ்தான் ஜோத்பூரின் ராமானுஜ கோட் போன்றவை.

Tags:    

Similar News