அரசாங்க வேலை வேண்டுமா? அப்பொழுது இந்த திருமாலை வணங்குங்கள்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு அருகே இருக்கிறது திருமால்பாடி கிராமம். இங்கு அரங்கநாத பெருமாள் காட்சி தரும் திருக்கோவில் அமைந்திருக்கிறது.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் சிலை வடிவமாக அருள் புரிந்துவரும் திருமால், இந்த திருமால்பாடியில் குளிர்ந்த ஏரிக்கரையின் மீது அமைந்த குன்று ஒன்றில் ஆனந்த சயன கோலத்தில் அடியாளர்களுக்கு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கும் அருள்பாலித்து வருகிறார். பல்வேறு புராணங்களை எழுதியவரும் வேதங்களை தொகுத்து வழங்கியவருமான வேதவியாசரின் மகன் சுகபிரம்ம ரிஷி. இவர் கிளிமூகம் கொண்டவர்.
அந்த புராண காலத்தில் இப்பகுதி விரஜாபுரி என்று அழைக்கப்பட்டது. வைகுண்டத்தில் பிரவாகம் கொண்டு பாயும் புண்ணிய நதியின் பெயர் விரஜை. இதன் பெயரில் அமைந்த இடம் தான் விரஜாபுரி. இங்குள்ள குன்றின் மீது சுகப்பிரம்ம மகரிஷி திருமாலை நோக்கி தவம் இயற்றினார். பல ஆண்டுகளாக அவர் இருந்த தவத்தின் பயனாக இந்த திருத்தலத்தில் தேவர்களுடன் கூடிய அரங்கநாதனாக சுக பிரம்ம ரிஷிக்கு திருமால் தரிசனம் தந்தார். இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட அனேக வைணவ நிகழ்வுகளும் வெகு விமரிசியாக நடைபெற்று வருகின்றன. இத்தல மூலவரான அரங்கநாதரையும் தாயார் அரங்கநாயகியையும் வழிபாடு செய்து வருபவர்களுக்கு திருமண பாக்கியம் குழந்தை பெற விரைவில் உண்டாகும் என்பது நம்பிக்கை.
அப்படி தங்களின் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மூலவருக்கு திருமஞ்சனம் சேவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இது தவிர அரசு வேலை, இடமாற்றம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு போன்றவற்றிற்காகவும் இந்த அரங்கநாதரை வழிபடுவர்களின் எண்ணிக்கை ஏராளம். செஞ்சியிலிருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் உள்ளது வளத்தி என்ற ஊர் . இங்கிருந்து தேசூர் செல்லும் சாலையில் சென்றால் அருந்தோடு என்ற கிராமம் வரும். இந்த கிராமத்தின் அருகில் தான் திருமால் பாடி திருத்தலம் உள்ளது.