கனவில் நீர்நிலை தோன்றினால் அது நமக்கு உணர்த்தும் ஆச்சர்ய செய்தியென்ன?

Update: 2021-03-02 00:00 GMT

கனவுகள் பலவிதம். இவை அனைத்தும் பலித்துவிடுமா என்றால் இல்லை. பெரும்பாலான கனவுகள் நினைவில் இருப்பதே கடினம். கனவு கலைந்து விழித்து பார்க்கையில், ஒரு சில காட்சிகளை கோர்வையாக்கி நாமே அதற்கு ஓர் உருவம் கொடுக்க முனைந்தால் மட்டுமே உண்டு. அந்த வகையில் கனவுகள் நமக்கு சிலவற்றை உணர்த்துகின்றன என்பதும் உண்மையே நிமித்தங்கள் அடிப்படையிலும், கனவுகளுக்கு அர்த்தம் வகுக்கும் அறிஞர்களின் மேற்பார்வையிலும் கனவுகளுக்கான அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்றாலும், சில பொது பலன்கள் உள்ளன.



அந்த வகையில் கனவில் நீர் மற்றும் நீர் சார்ந்த விஷயங்கள் தோன்றினால் அதற்கான அர்த்தம் என்ன? நீர் என்பது மனித உணர்வுகளுடன் தொடர்புடையது. யாராலும் நீரை கட்டுப்படுத்த முடியாது. நீரின்றி அமையாது உலகு என்பது போல், நீரில்லாமல் ஒரு மனிதரால் வாழ முடியாது,. நீரால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்.

வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் அதன் தீவிரத்தை பொருத்து அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. மென்மையான, சிறிய அளவிலான வெள்ளமாக இருந்தால் அது நம் கோபம், ஆக்ரோஷம் ஆகியவை நீர்த்து போவதன் அறிகுறியாகவும். வெள்ளத்தின் தீவிரம் அதிகமாக இருக்குமாயின் அது நம்முடைய அதீத அழுத்தத்தை குறிப்பதாக உள்ளது. 



நீர் பொங்கி வழிவது போன்ற கனவாக இருந்தால், வீடுகளில் சிறிய பாத்திரங்கள் மற்றும் இதர வீட்டு உபயோக பொருட்களில் நீர் பொங்குவதை போல் இருக்குமாயின் அது நிறைவான வாழ்வையும். அதிதீவிரமான நீர்வீழ்ச்சி போன்றவற்றை கண்டால், உடனடியாக நாம் கொண்டிருக்கும் மன அழுத்தத்தை வெளியேற்ற வேண்டும் என்பதை உணர்த்துவதாக உள்ளது.

அடுத்ததாக நீர் நிலைகள் வீட்டிலோ அல்லது நீர் நிலையிலோ மெல்ல மெல்ல நிறைந்து உயர்வதை போன்று கனவு கண்டால், நம்முடைய உணர்வு நிலை அதிகரிக்கிறது என்று அர்த்தம். அது நன்மையோ, தீமையோ சமீபத்தில் நமக்கு அதிகரித்திருக்கும் உணர்வு என்பதை கவனித்து பார்ப்பதற்கான எச்சரிக்கையாக தான் இந்த கனவு. மொத்தத்தில் கனவு என்பது அபரீமிதமான உணர்வுகளின் அடையாளமாக சொல்லப்படுகிறது.

இவை பொதுவாக சொல்லப்படும் கருத்துகளே ஆகும். ஒருவருக்கொருவர் கனவுகளின் தன்மையும், அர்த்தமும் மாறுபடும். தண்ணீர்

Tags:    

Similar News