வீட்டிலிருக்கும் கெட்ட சக்திகளை வெளியேற்ற எளிமையான குறிப்புகள்

Update: 2022-07-08 02:14 GMT

இந்த உலகம் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல் இரண்டையும் உள்ளடக்கியதே. நேர்மறை ஆற்றலை நாம் எப்படி நமக்கு வசமாக்கி கொள்கிறோம் என்பதை பொருத்து தான் நம் நல்வாழ்கை அமைந்துள்ளது. அந்த நல்ல் ஆற்றலை தேடித்தான் கோவில்களுக்கு செல்வது, நல்லதையே பேசுவது, நல்லதையே நினைப்பது, செய்வது என அறம் சார்ந்த செயல்களில் ஈடுபடுகிறோம்.

நம்முடைய மரபில் சுத்தமான வீடுகளில் தான் இலட்சம் வாசம் செய்கிறார் என்கிற நம்பிக்கை உண்டு. வீட்டினை தெய்வ கடாக்ஷமாக வைத்து கொள்ள தினசரி பூஜைகள், வாசனை பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம். இருப்பினும் சில நேரங்களில் கெட்ட ஆற்றல்கள் அதாவது பில்லி சூனியம் போன்ற தீய அதிர்வுகளால் வீடுகளில் தொடர்ந்து பிரச்சனை நிகழ்வதை நாம் உணர முடியும்.

இது மூட நம்பிக்கை என்பதையும் தாண்டி, வீட்டில் நல்ல அதிர்வுகளை நிலையாக வைத்திருக்க வேண்டியது நம் பொறுப்பு. சரி, ஒரு வீட்டில் தீய சக்திகள் இருக்கிறது என்பதை ஒருவர் எப்படி அறிந்து கொள்வது,

வீட்டில் இருப்போருக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போவது, சரியான மருத்துவ சிகிச்சைகளை வழங்கினாலும் அவர்களால் அந்த சிகிச்சைக்கு ஒத்துழைக்க முடியாமல் போவது போன்ற சிரமங்களை நாம் கவனிக்கலாம்.

உறவுகளுக்குள் தொடர்ச்சியான சண்டை, சச்சரவுகள், இருப்பது. இதன் மூலம் மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்சனைகள் இருக்கலாம்.

தொழில் வாழ்க்கையில் முடக்கம், பொருளாதார தடை போன்றவை தீய ஆற்றலின் அறிகுறியாக கருதப்படுகிறது. எனில் இது போன்ற தீய ஆற்றலிலிருந்து விடுபட்டு, இல்லத்தை நல்ல அதிர்வுகள் வைத்திருக்க எளிமையான சில குறிப்புகள்

வீடுகளை பூட்டியே வைக்காதீர்கள், நல்ல காற்றும் நல்ல வெளிச்சமும் வீட்டினுள் வரும் வாய்ப்புகள் இருந்தால் அவற்றை குறிப்பிட்ட நேரம் திறந்து வையுங்கள். இதன் மூலம் மனம் அமைதியடையும், நல்ல வெளிச்சம் மனதின் அழுத்தத்தை போக்கும் என்பது உளவியல் ரீதியாக சொல்லப்படும் பரிந்துரை.

வீட்டிலுள்ள தேவையற்ற பொருட்களை அவ்வப்போது அப்புறப்படுத்துங்கள். என்றாவது தேவைப்படும் என்று தேவையற்ற பொருட்களை நாம் அதிகம் சேர்த்திருப்போம். அதற்கென நேரம் ஒதுக்கி தேவையற்றதை அப்புறப்படுத்துங்கள்.

வீட்டில் வெளியிலிருக்கும் யார் மூலமாக கெட்ட சக்திகள் ஊடுருவியிருக்கலாம் என நீங்கள் நினைத்தால் வீட்டில் ஒரு கிண்ணத்தில் கல் உப்பை போட்டு வைப்பது வீட்டில் உள்ள கெட்ட ஆற்றலை விலக்கும் ஒரு வழியாகும்.

பெரும்பாலான நேரங்களில் தூபம், சாம்பிராணி போன்ற தெய்வீக நறுமணங்களால் வீடு நிரம்பியிருப்பதையும், எப்போது ஒரு விளக்கு எரியுமாறும் பார்த்து கொள்ளுங்கள்.

Tags:    

Similar News