நம் பாரம்பரியத்தில் காக்கைக்கு உணவு வைப்பதால் நிகழும் ஆச்சர்ய நன்மைகள் என்ன?

நம் பாரம்பரியத்தில் காக்கைக்கு உணவு வைப்பதால் நிகழும் ஆச்சர்ய நன்மைகள் என்ன?

Update: 2021-02-21 08:49 GMT

காகம் ஒரு விநோத பறவை. நம் வாழ்வில் நிகழ்கிற மாயமான, மர்மான நிகழ்வுகளுக்கு காகத்தை தொடர்பு படுத்துவதுண்டு. நம் அன்றாட வாழ்வியலுடன் தொடர்புடைய பறவை காகம். மனிதர்களின் உணர்வுகளை நன்றாக புரிந்திருக்கும் ஒரு பறவையாக காகத்தை சுட்டி காட்டுகிறார்கள். கனவில் வந்தால், ,நிஜத்தில் வந்தால் காக்கை நமக்கு உணர்த்தும் ஆன்மீக ரீதியாக, நிமித்த ரீதியான செய்திகள் பல.

சாஸ்திர ரீதியாக பார்த்தால், காகம் நல்ல அதிர்வுகள் மற்றும் மோசமான அதிர்வுகள் இரண்டின் குறியீடாகவும் பார்க்கப்படுகிறது. நம் பண்டைய கலாச்சாரத்தில் காகம் என்பது மனித ஆன்மாவை வழிநடத்தும் பறவையாக பார்க்கப்படுகிறது. ஆனால் இன்றைய நவீன காலத்தில் இதற்கான வேறு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது.

ஒருவருடைய வாழ்வில் காக்கையின் வருகை என்பது புதிய மாற்றத்திற்கான அடையாளமாக கருதப்படுகிறது. நமக்கு புரியாத உலகம் காகத்திற்கு புரிவதாக சொல்லப்படுகிறது. பறவையில் காகமும், விலங்குகளில் பசுவும் மனித ஆன்மாவை உணரக்கூடிய உயிரனங்களாக  கருதப்படுகிறது.

மேலும் காகை கரைந்தால் உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள் என்று சொல்வதுண்டு. இதற்கான அறிவியல் காரணம், காகை மிக உயரமான இடத்தில் கூடு கட்டும். எனில் அதற்கு மிக விரிவான பார்வையிருக்கும். அதானாலேயே வீட்டிற்கு வருபவர்கள் குறித்து அதனால் உணர முடிகிறது. காகை வீட்டின் ஜன்னல் அல்லது கதவு அருகே அமர்ந்திருந்தால் நம் அருகில் ஏதோவொரு மரணம் சம்பவிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

காகைக்கு இருக்கும் மற்றொரு குணம் அச்சமின்மை. எதை கண்டும் அஞ்சாது. எனவே காகையை நல்ல அதிர்வுள்ள பறவையாக நாம் கருதலாம். இதிலிருக்கும் மற்றொரு முக்கியமான விஷயம். இறந்தவர்களை எண்ணி காக்கைக்கு உணவு வைப்பது. இது எதனால் எனில், காகைக்கு தெய்வீக தன்மை உண்டு. அதனால் ஆன்மாவை உணர முடியும். இறந்த பித்ருக்களுக்கு நிறைவேறாத ஆசை என ஏதேனும் இருந்தால், வைத்த உணவை எடுக்க வேண்டாம் என்கிற சமிக்கை ஆன்மாவிடமிருந்து காக்கைக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

காகம் உணவை உண்டு விட்டால், இறந்தவர்கள் நிறைவுடன் இருக்கிரார்கள் என்றே மரபு ரீதியாக கருதுகிறார்கள். இதன் மூலம் பித்ருக்களின் ஆசிர்வாதத்தை நாம் பெற முடியும்.

Similar News