இந்துப்பில் விளக்கு ஏற்றினால் ஏற்படும் ஆச்சர்ய பலன்கள்? சுவாரஸ்ய தகவல்!
இந்துப்பில் விளக்கு ஏற்றினால் ஏற்படும் ஆச்சர்ய பலன்கள்? சுவாரஸ்ய தகவல்!
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். உப்பு அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது உப்பில்லா உணவை உட்கொள்வது கடினம் தான். ருசிக்காக மட்டுமின்றி அவை தரும் நன்மைகளும் ஏராளம். அந்த வகையில் உப்பில் பல வகை உண்டு அதில் முக்கியமான இரண்டு தூள் உப்பு, மற்றொன்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்வது போல கல் உப்பு. ஆனால் இந்த இரண்டையும் தாண்டி மற்றொரு உப்பு சமீப காலமாக மருத்துவர்களால், ஆரோக்கியம் சார்ந்த நிபுணர்களால் பரிதுரைக்கப்படுகிறது எனில் அது இந்துப்பு.
இந்துப்பு என்பது இமைய மலை பகுதிகளில் உள்ள உப்பு பாறை படிகங்களிலிருந்து தயாரிக்கப்படுவது. ஆங்கிலத்தில் இதனை “ஹிமாலையன் ராக் சால்ட்” என்று அழைக்கின்றனர். இதில் ஏராளமான தாதுப்பொருட்கள் இருக்கின்றன மெக்னீசியம், பொட்டாசீயம் மற்றும் கால்சியம் போன்ற உடலுக்கு நன்மை தரும் பல விஷயங்கள் இருக்கின்றன. இன்றைய நவீன மருத்துவம் நம் பாரம்பரியத்தை நோக்கி திரும்பும் வேளையில் பல நிபுணர்கள் இந்த இந்துப்பை நாம் உண்ணும் வெள்ளை உப்புக்கு மாற்றாக பயன்படுத்த அறிவுருத்துகின்றனர்.
இதில் ஆன்மீக ரீதியாக உப்பின் பயன்பாடும் அதிகமாகவே உள்ளது. ஆன்மீக ரீதியாக உப்பு என்பது நாம் இருக்கும் இடத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டதாக அறியப்படுகிறது. தீய சக்திகளை உள்வாங்கி கொண்டு இருக்கும் சூழலை சுத்திகரிப்பது இதன் தன்மை. அந்த வகையில் இந்துப்பு விளக்கு என்பது சமீப காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இந்துப்பு விளக்கு என்பது, இமாலைய கல் உப்பின் பெரிய பெரிய கட்டிகளின் நடுவே ஒரு விளக்கை வைத்து ஒளிரச்செய்வது. இப்படியான ஒரு அமைப்பால் முதலில் கண்களுக்கு வித்தியாசமான சூழல் தென்படும், இளஞ்சிவப்பு நிறத்தில் அந்த விளக்கு உமிழ்கிற வெளிச்சம் கண்களுக்கு மனதிற்கு பெரும் இதமாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அலங்கார பொருளாகவும், மற்றும் பல நன்மைகளுடனும் இந்த உப்பு விளக்கு செயல்படுகிறது.