இரவில் பூக்கும் தாவரங்களை வீட்டின் அருகில் நடுவதால் ஏற்படக்கூடிய பயன் என்ன?

இரவில் பூக்கும் தாவரங்களை வீட்டின் அருகே நட்டு வளர்க்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவர். அதற்கான காரணம் என்ன என்பது பற்றி சில தகவல்கள்

Update: 2022-08-10 13:15 GMT

வீட்டுக்கு அருகில் இரவில் பூக்கும் மரங்கள் செடிகள் நிறைய நட்டு வளர்க்க வேண்டும் என்று பண்டைய மக்கள் உபதேசிக்கும் போது அதை அலட்சியப் படுத்தும் புதிய தலைமுறையினர், அதன் பின்னால் உள்ள சில முக்கிய தகவல்களை புரிந்துகொள்ள வேண்டும்.

பகல் நேரம் சூரியன் இயற்கையை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்து வருவது எல்லோருக்கும் தெரிந்த உண்மை ஆனால் இரவில் இதே பாதுகாப்பு எவ்வாறு கைகூடுகிறது என்பதில் சந்தேகம் எழலாம் இரவில் பூக்கும் தாவரங்கள் இயற்கையை பாதுகாக்கும் ஆற்றல் உடையவை என்கின்றனர்.

ஆனால் வீட்டுக்கருகில் நடக்கூடாத மரங்களும் உண்டு.

காஞ்சி மரம், தானி,பீலுவேம்பு, நறுவரி,கள்ளி,கரும்பனை என்பவை வீட்டுக்கருகில் வளர்வதை தடுக்க வேண்டும். விளைச்சலை நாசம் செய்தல், நோயணு பாதிப்பபு உண்டாக்குதல், ஊரும் பிராணிகளுக்கு தஞ்சம் அளித்தல் என்ற காரணங்களால் மேலே குறிப்பிட்ட தாவரங்களை வீட்டின் அருகில் நட வேண்டாம் என்று கூறுகின்றனர்.

Similar News