ஆரத்தி எடுப்பதன் பின்னால் உள்ள ரகசியம் தெரியுமா?
தமிழர் பண்பாட்டில் ஆரத்தி எடுப்பது என்பது மிக முக்கிய நிகழ்வாக கடைபிடித்து வரப்படுகிறது. இதன் பின்னுள்ள ரகசியம் அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது பற்றி சில தகவல்
விஞ்ஞானமும் நவீன வாதமும் முற்போக்கு வாதமும் எல்லாம் நம் சமூகத்தில் மிகவும் செல்வாக்கு செலுத்தி இருந்தபோதிலும் சில நம்பிக்கைகள் என்றும் தவிர்க்க முடியாதவையாக நிலைத்து நிற்கின்றன. இதில் ஒன்றுதான் ஆரத்தி எடுப்பது.
பயணங்கள் கழிந்துவரும் குடும்பத்தினர், திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு வரும் தம்பதிகள், மகப்பேறு முடிந்திருக்கும் தாய் முதலியோரை பொதுவாக ஆரத்தி எடுப்பதும் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்க்கின்றனர்.
மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து இரண்டு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர்கள் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம். மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.
இது விஞ்ஞான ரீதியாக சொல்லப்படுகிற காரணம் என்றாலும் கண்திருஷ்டி கழிப்பதற்கு ஒரு விஷயமாகவும் இது உள்ளது ஆரத்தி எடுப்பது மங்களகரமான விஷயமாக கருதப்படுகிறது.