இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தரிசனம் தரவிருக்கும் அயோத்தி ராமர் - திறப்பு எப்போது தெரியுமா?

அயோத்தியில் ராமர் கோவிலில் 40 சதவீத கட்டுமான பணி நிறைவடைந்துள்ளது.அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தரிசனம்

Update: 2022-08-29 13:15 GMT

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுமான பணி 40 சதவீதம் முடிவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க ராம ஜென்மபூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கட்டுமான பணி நடந்து வரும் நிலையில் ராம ஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத்ராய் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அயோத்தியில் முகாமிட்டுள்ள அவர் கரசேவக புரத்தில் தங்கி இருக்கிறார்.

தினம்தோறும் கட்டுமான பணிகளை மேற்பார்வை இடுவதுடன் அதன் முன்னேற்றம் குறித்த கூட்டங்கள் நடத்தி ஆய்வு செய்து வருகிறார்.

சம்பத் கூறியதாவது:-

கோவில் கட்டுமான பணி மற்றும் கோவிலை சுற்றி உள்ள சாலைகளை மேம்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 40 சதவீத கட்டுமான பணி முடிந்துள்ளது 80 சதவீத பீட பணி முடிந்துள்ளது.

அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இது கடவுள் காரியம் என்பதால் பணத்துக்கு தட்டுப்பாடு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.கோவில் பணிமனையில் கோவில் கட்டுமானத்திற்கான கற்களை செதுக்கும் பணியில் ஆண் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தற்காலிக ராமர் கோவிலில் சாமி கும்பிட வருபவர்கள் அந்த இடத்துக்கு சென்று பார்ப்பது வழக்கமாக உள்ளது. கற்களை தொட்டு கும்பிடுவதுடன் புகைப்படமுமம் எடுத்து கொள்கிறார்கள். இது தொடர்பாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை அதிகாரிகள் கூறியதாவது:-

ராமர் கோவில் ஆயிரம் ஆண்டுகளை தாண்டி நிலைத்திருக்கும் வகையில் மண்ணில் பிரம்மாண்ட அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதுகோவிலின் கருவறைக்குள் பயன்படுத்த ராஜஸ்தான் மாநிலம் மக்ரானா மலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மார்பிள்கள் பயன்படுத்தப்படும். மார்பிள் செதுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. செதுக்கப்பட்ட மார்பிள் கற்கள் ஏற்கனவே அயோத்திக்கு வந்து விட்டன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள் .

ராமர் கோவிலை சுற்றி உள்ள 70 ஏக்கர் நிலத்தில் சீதை, இலட்சுமணன், விநாயகர், சபரி ஜடாயு ஆகியோருக்கும் கோவில்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் புகழ்பெற்ற அம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை அகலப்படுத்த படுகிறது.அதற்காக வழியில் உள்ள கடைகள் வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.

இதற்குஎதிர்ப்பு எழுந்த போதிலும் தற்போது உள்ளூர் மக்கள் தாங்களே முன்வந்து தங்கள் கடைகளையும் வீடுகளையும் இடிக்கிறார்கள்.





 


Similar News