வாழ்வில் சுபிட்சம் அடையவும் நிம்மதி நிலைக்கவும் செய்ய வேண்டியது என்ன?- ஜென் கதை

ஒரு மனிதன் வாழ்வில் நிம்மதி அடையவும் சுபிட்சம் நிலைக்கவும் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிய சுவாரசிய கதை

Update: 2023-02-01 07:00 GMT

ஒரு செல்வந்தர் தன்னுடைய வாழ்வை வெறுத்த நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்காக மலைமுகடை நோக்கி சென்றார். வழியில் ஒரு மரத்தின் அடியில் ஒரு ஜென்குரு அமர்ந்திருப்பதை கவனித்தார். அந்த ஜென் குருவின் முகத்தில் படர்ந்து இருந்த புன்னகை செல்வந்தரை அவரிடம் அழைத்துச் சென்றது. கண்மூடி தியானத்திலிருந்து ஜென் குரு தன் முன்பாக யாரரோ இருப்பதை உணர்ந்தவராக கண்களை திறந்தார். அங்கே ஒருவர் தரையில் அமர்ந்து கை கூப்பி வணங்கி இருப்பதை கவனித்தவர் "யார் நீ? உனக்கு என்ன வேண்டும் ?"என்றார்.


ஐயா நான் மிகப்பெரிய செல்வந்தன் எல்லா வசதிகள் இருந்தும் மனதில் அமைதி இல்லை. அதனால் வாழ்க்கை இனிமையாக செல்லவில்லை. எனவே தற்கொலை செய்து கொள்ளும் நினைப்போடு மலை உச்சிக்குச் சென்று கொண்டிருந்தேன். வழியில் உங்களின் முகம் எனக்கு ஏதோ சேதி சொல்வதாக இருந்தது. அதனால் இங்கு வந்தேன் என்றார் அந்த செல்வந்தர் செல்வந்தர். பேசும் போது அவரது கால்களை உன்னிப்பாக கவனித்தார் ஜென் குரு. ஏனெனில் செல்வந்தர் தன்னுடைய கால்களை ஆட்டிக்கொண்டே இருக்கும். பழக்கம் வைத்திருந்தார். ஜென் குரு தன் கால்களை கவனிப்பதை உணர்ந்து செல்வந்தர் கால் ஆட்டுவதை சட்டென்று நிறுத்திவிட்டார். உடனே ஜென் குரு "எதற்காக கால் ஆட்டுவதை நிறுத்தினாய்?" என்று கேட்டார். அதற்கு செல்வந்தர் "நீங்கள் என் கால்களையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அதனால் தான்" என்று இழுத்தார். "உனக்கு எவ்வளவு நாட்களாக இந்த பழக்கம் இருக்கிறது?" என்ற குருவின் கேள்விக்கு "என் நினைவு தெரிந்தது முதலாகவே இருக்கிறது" என்று பதில் அளித்தார் செல்வந்தர்.


இப்போது  குரு கூறினார் "நீ பிறரை சார்ந்து வாழ நினைக்கிறாய். உலகத்தைப் பற்றி கவலை கொள்கிறாய். உன் கால்களை நான் கவனித்ததால் நீண்ட நாள் பழக்கத்தை கூட நிறுத்திவிட்டேன் என்கிறாய். இனிமேல் உன்னை நீயே கவனிக்க தொடங்கு. உன்னிடம் உள்ள எதை மாற்ற வேண்டும் எதை நிறுத்த வேண்டும் என்பது தெரிய வரும் அதன் பின் சுபிட்சம் உண்டாகும்" என்று கூறினார்.

Similar News