பாவம்- புண்ணியம் , இதில் இறைவனே பொருத்துக் கொள்ளாத பாவம் என்பது என்ன?

Update: 2022-11-18 01:00 GMT

கருணையின் உருவாக திகழ்பவர் சிவன். முறையான விரதத்தை, சடங்குகளை பின்பற்றினால் சிவனின் அருளிற்கு பாத்திரமாவது எளிது. அதே வேளையில், இந்த கருணை பெருங்கடலே சில விஷயங்களை பொருத்தக்கொள்ளமாட்டார் என்றும் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

பின்வருபவற்றை சிந்தித்தாலே பெரும்பாவம்

• பிறரின் மனையாள் மீது விருப்பம் கொள்வது நியதிகளின் படி தவறு.

• பிறரின் வளத்தை, சொத்தை யாரேனும் கவர நினைத்தால் அது அறத்திற்கு புறம்பானது.

• மிகவும் அப்பாவியாக இருக்க கூடிய மனிதர்களின் உடமைகளை, கனவினை, நம்பிக்கையை கொள்ளையடிக்க நினைப்பது தவறு

• ஒருவர் நல்ல பாதையை மறந்த தீய வழியில் நடக்கலாம் என சிந்தித்தால் அதனை சிவபெருமான ஒரு போதும் பொருக்க மாட்டார்.

பின்வருபவற்றை பேசினாலே பெரும்பாவம்

• ஒரு பெண் கருவுற்றிருக்கும் போதோ அல்லது மாதவிடாய் காலத்திலோ அவளை துன்புறுத்தும் விதமாக பேசினாலே பாவம்

• ஒருவரின் மரியாதையை, ஒருவரின் கெளவரத்தை குலைக்கும் வகையில் அவர் பின் பேசினால் பாவம்

• ஒருவரை குறித்து அவர் இல்லாத வேளையில் புரளி பேசுதல் குற்றம்

பின்வருபவற்றை செய்தால் பெரும்பாவம்

• இந்து மரபில் உண்ண கூடாதவை என வரையறுக்கப்பட்டவற்றை உண்டால் பெரும்பாவம்

• தன்னை விட வலுவிழந்த உயிரனத்திடம், பெண்களிடம், குழந்தைகளிடம் ஒருவர் வன்முறையை செயலாலோ, எண்ணத்தாலோ அல்லது பேச்சாலோ நிகழ்த்தினால் அது மன்னிக்க முடியாத குற்றம்.

• கோசாலையை அழிக்க யாராவது முற்பட்டால் அது பெரும் பாவம்

•  கோவிலிலிருந்து உடமைகளை திருடினால் பெரும்பாவம்

• குருவை அவமதித்தல் பாவத்திலும் பாவம்.

அறம் தவறுகின்ற எந்தவொரு செயலும் பாவம். அதற்கான மன்னிப்பு மிக எளிதாக கிடைக்கக்கூடியது அல்ல என்ற போதும். மேல் கூறிய பாவங்கள் அனைத்தும் சிவனால் ஒருபோதும் பொருத்துக்கொள்ள முடியாத பாவங்களாக சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"பெருங்கருணை பேராறே " என்று திருவாசகம் சிவனை போற்றி துதிக்கிறது. இருந்த போது அந்த கருணைக்கடல் இந்த பாவங்களை கண்டால் தன்னுடைய நெற்றி கண்ணை திறப்பார் என்பது ஐதீகம்.

அவரின் ரெளத்திரத்திற்கு ஆளானவர்களுக்கு விபோசனம் அத்துனை எளிதானதல்ல என்பதால். இதனை ஒரு தனிமனிதன் தன் வாழ்வின் வழிகாட்டுதலாக எடுத்து கொள்வது மோட்சத்திற்கான வழியாக அமையும்.

Tags:    

Similar News