யாரெல்லாம் ருத்ராக்‌ஷம் அணியலாம்? அதன் வகைகளை தேர்வு செய்வது எப்படி?

Update: 2021-03-06 00:45 GMT

ருத்ராக்‌ஷம் என்கிற வார்த்தை சமஸ்கிருதத்தில் இருந்து உதித்தது. இதனை ருத்ரா என்றும் அக்‌ஷா என்றும் பிரிக்கலாம். இதன் பொருள் சிவனின் கண்ணீர் என்பதாகும். சிவ பெருமான் ஆனந்த பெருக்கில் உதித்த கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ராக்‌ஷமாக ஆனது என்பது நம்பிக்கை.

ருத்ராக்‌ஷத்தின் புனித கதைக்குறித்த பலவிதமான குறிப்புகள் இந்து புராணங்களில் காண கிடைக்கிறது. வேத நூல்கள், சிவ புராணம், பத்ம புராணம் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் போன்ற பல நூல்களில் ருத்ராக்‌ஷம் குறித்த குறிப்புகள் உண்டு. 



ருத்ராக்‌ஷம் என்பது சிவனுக்கு உகந்தது என்பதால் மட்டும் இத்தனை முக்கியத்துவம் அல்ல. அறிவியல் ரீதியாகவும் மனித உளவியலின் படி ருத்ராக்‌ஷம் என்பது அதீத மின் காந்த அம்சங்களை கொண்டிருக்கிறது.

ருத்ராக்‌ஷத்தில் பல வகை உண்டு. அதில் ஒவ்வொரு விதத்திற்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. நோய்களை கட்டுப்படுத்துவது, இரத்த அளவை கட்டுப்படுத்துவது ஆன்மீக சாதனாக்களுக்கு உதவுவது, தீய ஆற்றல்கள் இடமிருந்து பாதுகாப்பு அறணாக திகழ்வது போன்று பல நன்மைகளை ஒவ்வொரு ருத்ராக்‌ஷமும் வழங்குகின்றன. 



அதில் ஒரு வகை கெளரி சங்கர் ருத்ராக்‌ஷம். இது இரு ருத்ராக்‌ஷங்கள் இணைந்த வடிவில் இருக்கும். இது சிவனையும் பார்வதியையும் குறிப்பதாகும். திருமண வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் நிலவ தம்பதிகள் இருவரும் இந்த ருத்ராக்‌ஷத்தை அணியலாம் என சொல்லப்படுகிறது.

ஒரு முக ருத்ராக்‌ஷம் என்று ஒரு வகை உண்டு. இதனை ஏக முகி என்கின்றனர். இது சூரியனை குறிப்பதாகும். இதுவே அனைத்து வகைகளிலும் சிறந்ததாக கருதப்படுகிறது. மேலும், இது மனிதர்களுக்கு தேவையான அனைத்து செளபாக்கியங்களையும் வழங்குகிறது.

அடுத்து இரண்டு முக ருத்ராக்‌ஷம் உண்டு இதை தோமுகி என்கின்றனர். இது நிலவினை குறிப்பதாகும். இது இடப்புற கண், குடல், சிறுநீரகம் போன்ற இடப்புற உறுப்புகளின் நன்மைக்கு பெரிதும் துணை புரியும் என சொல்லப்ப்டுகிறது.

மேலும் பஞ்சமுகி, ஷண்முகி போன்ற பல விதமான ருத்ராக்‌ஷங்களும், அதற்குரிய பலன்களும் உண்டு. இதனை சரியான நாளில் சரியான சக்தியூட்டப்பட்ட முறையில் அணிய வேண்டும். இதில் சேதாரம் ஏதேனும் இருப்பின் அந்த ருத்ராக்‌ஷத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் அவை எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

Tags:    

Similar News