அமாவாசையில் பெரும்பாலானோர் அசைவத்தை தவிர்ப்பது ஏன்? ஆச்சர்ய தகவல்

Update: 2021-12-31 00:30 GMT

இந்து மரபில் சொல்லப்பட்டுள்ள அனைத்து விஷயங்களும் காரண காரியங்களுடன் சொல்லப்பட்டதே ஆகும். சிறிய விஷயம் தொடங்கி பெரிய விஷயம் வரையில் அனைத்திற்கு பின்னும் ஓர் ஆழமான சிந்தனை பொதிந்திருக்கும். அந்த வகையில் நம் கலாச்சாரத்தில் கோவிலுக்கு செல்லும் போது, இறை வழிபாட்டினை செய்யும் போது மற்றும் முக்கிய விரத நாட்கள், மாதங்கள், அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் அசைவம் உண்பதை தவிர்ப்பார்கள்.

ஒரு சிலர் முழுமையான சைவ உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கின்றனர். ஒரு சிலர் இது போன்ற முக்கிய நாட்களில் அசைவத்தை தவிர்க்கிறார்கள். எனில் ஏன் தவிர்க்க வேண்டும்? என்கிற கேள்வி இயல்பானது. கோவில் என்பது புனிதமானது அங்கே செல்கையில் சுத்திகரிக்கப்பட்ட ஆராவுடன் நாம் இருப்பது நன்று. அங்கிருக்கும் நேர்மறை ஆற்றலை நம் உடல் உள்வாங்கும் தன்மையுடன் இருத்தல் அவசியம்.

அறிவியல் ரீதியாக சொன்னால், அசைவ உணவுகளை உண்கிற போது அதை முழுமையாக செரித்து வெளியேற்ற நம் உடல் கிட்டதட்ட மூன்று நாட்கள் வரை எடுத்து கொள்கிறது. எனில் அசைவத்தின் தாக்கம் அதாவது அந்த மந்த தன்மை நம்ம் உடலில் மூன்று நாட்கள் வரை இருக்கும். ஆனால் காய்கறிகள் மற்றும் பழ வகைகள் என்பது மிக சில மணி நேரங்களிலேயே செரிக்க கூடியது. இதனால் உடல் சுறுசுறுப்புடன் இருப்பதுடன் நேர்மறை ஆற்றலை உள்வாங்கும் தன்மையுடன் இருக்கும்.

அமாவாசையில் ஒருவர் அசைவத்தை தவிர்ப்பது ஏன் என்றால், நிலவிற்கு மனித உடலின் மீதான தாக்கம் அதிகம். குறிப்பாக மனிதர்களின் செரிமான மண்டலம் மீத் நிலவிற்கு தாக்கம் அதிகம். எனவே அமாவாசையின் போது நிலவு இல்லாததால் அன்றைய நாளில் மனித உடலின் செரிமான இயக்கம் சற்று பலவீனமானதாக இருக்கும். எனவே தான் நம் மூத்தோர் இந்த நாளில் தவிர்க்க சொல்லியுள்ளனர். இதை போலவே ஏகாதசி, பெளர்ணமி போன்ற நாட்களில் நம் மக்கள் பெரும்பாலானோர் விரதம் இருப்பதை கண்டிருப்போம். இது உடலை சுத்திகரிக்கும் ஒரு முறையே ஆகும். எனவே இறை வழிபாடு, கோவிலுக்கு செல்லுதல் போன்ற ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடும் போது, மனதையும் உடலையும் அதற்கான தயார் நிலையில் வைத்திருத்தல் அவசியம். உடலை நேர்மறை ஆற்றலை உள்ளிக்கும் தன்மையுடன் வைத்திருக்க சாத்வீக உணவே சரியானது.

Tags:    

Similar News