சிவராத்திரியில் தூங்காமல் விழித்திருக்க சொல்வது ஏன் ?

Update: 2021-03-12 00:00 GMT

சிவராத்திரி என்பது இந்துக்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிற ஆன்மீக நிகழ்வு, இந்த நாளில் சிவ பக்தர்கள் தூங்காமல் விழித்திருந்து சிவனை வழிபடுவார்கள் . சிவனின் அருள் கிடைக்க இந்த நாளை விட சிறந்த நாள் ஏதும் இல்லை. சிவராத்திரிக்கென்று விரத முறைகளும் இருக்கின்றன.




 


இந்து புராணங்களின் படி சிவராத்திரி அன்று விரதம் இருப்பது ரஜோ குணம் மற்றும் தமோ குணத்தை மேற்கொள்ளும் ஆற்றலை தருகிறது. மஹாசிவராத்திரி நாளன்று ஒருவர் எந்த உணவும் எடுத்துக்கொள்ளாமல் சிவனின் அருகிலேயே இருந்து சிவனை பூஜித்து சிவனின் நாமத்தை சொன்னால் கோபம் இச்சை பேராசை போன்ற குடங்களில் இருந்து விடுபடலாம். மேலும் இரவு முழுவதும் விழித்திருப்பது என்பது அவர்களுக்கான தமோ குணத்தை அளித்து ஆற்றலையும் உற்சாகத்தியும் அளிக்கும். வழக்கமாக இந்த நாளில் எள் கலந்த தண்ணீரில் காலையில் குளிக்க வேண்டும். இந்த நாட்களில் சிவாலயங்களில் சிவனுக்கு பாலிலும் தேனிலும் அபிஷேகம் நடைபெறும். இந்த நாட்களில் சிவபக்தர்கள் அரிசி கோதுமை மற்றும் தனியா உணவுகளை உட்கொள்ள கூடாது நீர் ஆகாரங்கள் மற்றும் பலன்களை உண்ணலாம்

 



 



இந்த நாளில் இயற்கையாகவே பிரபஞ்ச ஆற்றல் அதிகமாக இருக்கும் . ஆன்மீக சாதனாவில் இருப்பவர்கள் இந்த நாளில் விழித்திருந்தால் அந்த ஆன்மீக ஆற்றலோடு தொடர்பில் இருக்க முடியும் என்பது தார்பரியம் 

இந்த நாள் சிவன் மற்றும் பார்வதியின் திருமண நாள் என்றும் சிவன் விஷத்தை அருந்தி உலகை காப்பாற்றிய இரவு என்றும் பல்வேறு கதைகள் இருக்கின்றன, இது சிவனுக்கு மிக உகந்த ஓர் இரவாக பொதுவாக கருதப்படுகிறது

இந்த இரவில் செய்யப்படும் பிராத்தனைக்கு நிச்சயம் பலம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. உடல் மற்றும் மன அளவில் சிவனின் தீவிர பக்தனாக இருப்பவர்களுக்கு இந்த இரவு சிவனின் அருளை பெற்று தருகிற இரவாக இருக்கும்

இந்த நாளில் சிவனுக்கு பூஜை செய்வோர் அரிசி எள் கோதுமை போன்றவற்றை சிவனுக்கு அர்ப்பணமாக அளிக்கலாம்.

தண்ணீர் குளிர்ந்த பால், கருப்பு சாறு போன்றவை சிவனை குளிர்வித்து அருளை நமக்கு பெற்று தரும் அடிக்கடி உடல் நோய்வாய் படுவோர் சிவனுக்கு நெய்யில் அபிஷேகம் செய்தல், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

Tags:    

Similar News