சிவபெருமான் தலையில் பிறையை சூடியிருப்பது ஏன்? ஆச்சர்ய புராணம்!

Update: 2021-04-16 00:15 GMT

சிவபெருமானை மனதில் எண்ணி வழிபடும் போதெல்லாம் மனதில் எழும் பல ரூபங்களுள் முக்கியமானது அவர் தலையில் பிறையை சூடியவாறு இருக்கும் காட்சி. தேவாரத்தில் "பித்தா பிறைசூடி "எனும் வரியை உச்சரித்து வணங்குபவர் பலர்.

இறைவனுக்கு இருக்கும் பல விதமான பெயர்களில் புகழ்பெற்ற ஒரு பெயர் சந்திரசேகரன். சந்திரன் என்பது நிலாவையும் சேகரம் என்பது உயரத்தையும் குறிப்பதாகும். சிவபெருமான் தன் சிரசின் உச்சியில் நிலவை சூடியிருப்பதாலேயே சந்திரசேகரர் என அழைக்கப்படுகிறார். ஆனால் பிறையை தலையைல் சூடுவது என்பது சராசாரியாக யாரும் செய்து விடக்கூடியது அல்ல. ஏன் இந்த தனித்துவமான அம்சத்தை சிவபெருமான் கொண்டிருக்கிறார் ?


அமிர்தத்தை பாற்கடலில் கடைந்த போது, பெருகிய ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்தினார். அதனாலேயே அய்யனுக்கு நீலகண்டன் என்ற பெயரும் உண்டு. அவர் அந்த விஷத்தை அருந்திய போது, விஷத்தின் தீவிரத்தால் அவருடைய உடலின் அழுத்தம் மிகவும் உயர ஆரம்பித்தது. உஷ்ணத்தை தவிர்த்து குளிர்ச்சியை நல்குவது சந்திரன் என்பதாலேயே தன்னுடைய உடலின் உஷ்ணத்தை, விஷத்தை தடுக்க சிவபெருமான் நிலவை தலையில் சூடினார் என்று கூறுவர்.


ஒருவருக்கு பிரச்சனை ஏற்படுகிற போது தன்னுடைய ஆக்ரோஷத்தன்மையை காட்டமால் அமைதியான முறையில் ஒரு விஷயத்தை அணுக வேண்டும் எனும் கோட்பாட்டையும் இந்த நிகழ்வு உணர்த்துகிறது. அதுமட்டுமின்றி தக்ஷனின் பிரஜாப்பதியின் 27 மகள்களான 27 நட்சத்திரங்களை சந்திரன் மணந்திருந்தான்.

அதில் ரோஹினியை மட்டும் அதிகம் விரும்பியதால், மற்ற மனைவி மார் தம் தந்தையிடம் சென்று முறையிட்டனர். இந்த பாரப்பட்சத்தை கண்டு கோபமுற்ற தக்‌ஷன் சந்திரனை ஒளியிழந்து போகட்டும் என சாபமிட்டதால் . தன் ஒளியை சந்திரன் இழந்தான்.

இந்த நிகழ்வால் இயற்கையும் பிரபஞ்சமும் நிலவின் ஒளியின்றி ஸ்தம்பித்தது. இந்த சிக்கலான நிலையிலிருந்து உலகை காக்க அனைவரும் சிவபெருமானை துதித்த போது அவர் நிலவுக்கு ஒளிகொடுக்கும் வகையில் தன்னில் தன் சிரசில் சந்திரனை சூடி ஒளி தந்தார். 15 நாட்கள் ஒளி பெறுவதும் மற்ற 15 நாட்கள் ஒளி குறைவதும் இதனால் தான் என மற்றொரு புராண கதை விளக்குகிறது. அமாவசை, பெளர்ணமி என்பதெல்லாம் காலத்தை கடந்த மஹாகாலனான சிவபெருமானின் திருவிளையாடல்களே!

Tags:    

Similar News