பழையன கழிந்து புதியன புகும் போகியில், தமிழகத்தில் காப்புகட்டுவது ஏன்?

Update: 2022-01-13 00:30 GMT

இன்று போகி, பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதும் பழமொழி. இங்கே பழயபழையன கழிந்து புதியன புகும் போகியில் காப்புகட்டுவது ஏன்?

இந்த நாளில் தமிழகத்தில் ஒரு தனித்துவமான பழக்கம் ஒன்று உண்டு. நல்ல நேரம் பார்த்து வீடுகள் தோரும் காப்பு கட்டுவார்கள். அது என்ன காப்பு கட்டுதல் என்றால்.. சிறுபீளை, பூலைப்பூ, வேப்பிலை, தும்பை, மாவிலை, பிரண்டை ஆகியவற்றையெல்லாம் சிறு சிறு கொத்துகளாக கட்டி வீட்டின் முகப்பில், வீட்டினுள் சமையல் கூடம் மற்றும் மற்ற அறைகளில் இந்த காப்பு கட்டை செருகுவது வழக்கம்.

இப்படியொரு பழக்கம் ஏன் வந்தது. முன்பு சொன்னது போல நம் முன்னோர்கள் அறிவார்ந்த ஞானிகள். இந்த காப்பு கட்டில் உள்ள அனைத்தும் மூலிகைகளே. ஆவரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ என்பது சித்தர் பாடல். எனில் இன்று ஆவாரம் டீ, ஆவாரம் பொடியில் கஷாயம் என எத்தனை நன்மைகள் நாம் உணர்ந்திருக்கிறோம். குளிர் காலத்திலிருந்து வெப்ப காலத்திற்கு மாறும் இந்த மகர சங்கராந்தி நாளில் இவ்வாறு மூலிகைகளை நாம் காப்பாக அதாவது பாதுகாப்பாக கட்டுவதன் மூலம் திடீரென தோன்றும் நோய்கள் வயிற்று போக்கு, ஒவ்வாமை, விஷம் போன்ற எதிர்பாராத விளைவுகளிலிருந்து விடுதலை பெறவே இப்படியொரு பழக்கம் உருவாக்கப்பட்டது

Tags:    

Similar News