இந்து மரபில் விபூதி அணிவதை மிகவும் புனிதமான சடங்காக கருதுகின்றனர். நெற்றியில் திருநீறு அணியும் பழக்கம் நம் முன்னோர்களால் நமக்கு காலம் காலமாக வழங்கப்பட்டு வந்துள்ளது. திருநீற்றை விபூதி என்றும் அழைப்பதுண்டு. விபூதி ஆனது சில நேரங்களில் ஹோமங்களில் இருந்து பெறப்படுகிறது. சில நேரங்களில் மரத்துண்டுகளை எரித்து அவை சக்தியூட்டப்பட்டு அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இந்து புராணங்களின் படி சிவபெருமான் தன் உடல் முழுவதும் திருநீற்றை பூசி கொண்டு காட்சி தருகிறார். சிவலிங்கத்தின் மீது பூசப்படும் மூன்று கீற்றால் ஆன திருப்பட்டைக்கென பொருள் உண்டு. முதல்கீற்று தானெனும் அகங்காரத்தை போக்குகிறது. இரண்டாம் கீற்று அறியாமையையும், மூன்றாம்கீற்று கர்மாவில் சிறிதளவையும் போக்குகிறது. திருநீறு அணிவதில் மற்றொரு விதம் உண்டு, திரிபுந்திரா எனப்படும் தன்மையில் சிவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக நெற்றி முழுவதும் திருநீறு பூசுவர்.
ஆனால் பொதுவாக திருநீற்றை மக்கள் தங்கள் ஆக்ஞா சக்கரத்தில் அணிகின்றனர். ஆக்னா சக்கரம் என்பது இரு புருவங்களுக்கு மத்தியில்வைக்கப்படுகிறது. ஆன்மீக சாதனாவில் இருப்பவர்கள் தொண்டை குழியின் மத்தியில் விசுத்திசக்கரத்தில் வைக்கப்படுகிறது ஒரு சில ஆன்மீக சாதகர்கள் மணிப்பூரகச் சக்கரத்தில் அதாவதுவயிற்று பகுதியில் பூசுவதும் உண்டு. இன்று கூட கோவில்களில்கைகளில் மீந்துவிட்ட விபூதியை குழந்தைகளுக்கு வயிற்றில் பூசிவிடுவதை நம்மால் காண முடியும்.இது மணிப்பூரக சக்கரத்தில் பூசும் பழக்கத்தின் நீட்சியே ஆகும்.
உடலில் உள்ள ஏழு சக்கரத்தில் விபூதியை வணங்கி அணிவதால் உடலிலும், நம்மை சுற்றியிருக்கும் சூழலிலும் ஒரு வித நேர்மறை அதிர்வுகள் பெருகுவதாக சொல்லப்படுகிறது. திருநீற்றை அணிந்த ஒருவர் அதன் தன்மையால் எளிதாக தியான நிலைக்குள் செல்ல முடிகிறது. இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும். தீமைகளில் இருந்து நம்மை காக்கும் கவசமாக திருநீறு செயல்படுகிறது என்று சொல்வது வழக்கம். அறிவியல் ரீதியாக பார்த்தால், திருநீற்றை அணிந்து கொள்ளும் பகுதியில் உள்ள நரம்புகளின் மீது திரு நீற்றின் அழுத்தம் பதிகிற போது அவை நமக்குள் இருக்கும் அச்சம், பதட்டம், குழப்பம் ஆகியவற்றை அவை பக்குவப்படுத்துகின்றன.மேலும் உறக்கமில்லாது தவிப்பவர்கள் திருநீற்றை வணங்கி அணிவதால் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.
Image : Amazon