சிவ பெருமானை வணங்குபவர்கள் சண்டிகேஸ்வரரை வணங்காமல் இருக்க முடியாது. பிரகார்ரத்தை சிவபெருமான் பிரகாரத்தை சுற்றி வருகையில் அவருக்கு இடது புறம் அமர்ந்திருப்பவர். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சண்டிகேஸ்வரர் என்பதை விட, கைகளை தட்டி வணங்கும் தெய்வம் என்றால் எளிதில் நினைவு வரும்.
யார் இந்த சண்டிகேஸ்வரர் இவரை வணங்கும் போது, ஏன் கைகளை தட்ட வேண்டும்? பெரியாபுராணத்தின் படி சண்டிகேஸ்வரரின் இயற்பெயர் விசாரசர்மன். இவர் சிறு வயதாக இருந்த போது மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.. சிறு வயதிலேயே சிவ பக்தி மேலோங்கி இருந்ததால் மாடு மேய்க்கும் தொழில் செய்கையில் பணிக்கு இடையே மணலால் சிவலிங்கம் செய்து ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டு வந்தார்.
இவரின் தவ வலிமையாலும், தன்னுடைய மேய்ப்பான் மீது கொண்டிருந்த அதீத அன்பினாலும், விசாரசர்மன் மேய்த்த மாடுகள் அவர் உருவாக்கிய மணல் லிங்கத்தின் மீது தானாக பாலை சுரந்து அபிஷேகம் செய்தன. இந்த நிகழ்வு தினசரி தொடர்ந்தது. இந்த செய்தி மாட்டின் உரிமையாளரை எட்டிய போது அவர் விசாரசர்மனின் தந்தையான எச்சதத்தனிடம் சென்று, "உங்கள் மகன் மணல் லிங்கம் அமைத்து தியானிக்கிறான். அதற்கு என் பசுக்களை கொண்டு அபிஷேகம் செய்ய வைக்கிறான். இதனை கண்டியுங்கள் என புகார் அளித்தார் ".
இதனை ஆராய விரும்பிய எச்சதத்தன் ஒரு நாள் மறைதிருந்து கண்காணித்தார். அப்போது மணல் லிங்கத்தின் முன் விசாரசர்மன் ஆழ்ந்த தியானத்தில் இருக்க, மாடுகள் தாமாகவே லிங்கத்தின் மீது பால் சுரந்து அபிஷேகம் நிகழ்த்தின. இதனை கண்டு கடும் சினம் கொண்ட தத்தன் அந்த மணல் லிங்கத்தை காலால் தகர்த்தார்.
இதனால் தவம் களைந்து எழுந்த விசாரசர்மன் ஒரு குச்சியால் தந்தையின் காலை தாக்கினார். அந்த குச்சி கோடாரியாக மாறி அவர் தந்தையின் காலை கடுமையாக தாக்கியது. அப்போது தோன்றிய சிவபெருமான், விசாரசர்மனின் பக்தியை மெச்சி அவர் தந்தையின் கால்களை சீராகி. விசாரசர்மனுக்கு ஆச்சர்ய வரமொன்றை அளித்தார்.