நவராத்திரி கொண்டாட்டங்களுள் ஒன்றாக கொலு வைத்து வழிபடுவது ஏன்?

Update: 2022-09-30 00:30 GMT

நவராத்திரி என்றதும் நம் நினைவில் வருவது 9 புனித நாட்களும், வீடுகள் மற்றும் கோவில்களில் வைக்கும் கொலுவும் தான். நவராத்திரியின் அடையாளமாக மாறியிருக்கும் கொலுவிற்கு பின் இருக்கும் சுவரஸ்யமான கதை தெரியுமா?

இந்த புவி உலகை தன் கட்டுபாட்டில் வைத்திருந்தான் மகிஷா(மகிஷாசுரன்) எனும் அசுரன். மற்ற தெய்வ பலங்களை விடவும் அவனுடைய சக்தி அதிகரித்து வந்தது. எந்த ஆண்களாலும் தனக்கு மரணம் இல்லை எனும் வரத்தை பெற்ற அந்த அசுரனை அழிக்க சக்தி வாய்ந்த பெண்மையால் மட்டுமே முடியும் என்பதால். விண்ணுலகம் இருந்த அனைத்து அம்சங்களும் தங்கள் ஆற்றலை ஒன்றிணைத்து உருவாக்கிய தனித்துவமான சக்தியின் அம்சமே மகாதேவி.

இந்த மகாசக்தி அந்த மகிசாசுரன் எனும் அரக்கனை அழிப்பதற்காக எடுத்த அவதாரம் தான் துர்கை அம்மன். சிம்ம வாகனத்தில் அம்பிகை வலம் வந்து மகிசாசுரனுக்கு எதிராக போர் புரிந்த போது மொத்த உலகமும் ஸ்தம்பித்தது. 9 நாட்கள் நிகழ்ந்த போரின் இறுதியில் மகிசாசுரனின் படைகள் முழுவதும் அழிந்து அவன் மட்டுமே எஞ்சியிருந்தான்.

அன்னையின் கணைகளிலிருந்து தப்புவதற்காக ஒவ்வொரு வடிவமாக மாறிக்கொண்டிருந்த அசுரன், இறுதியாக எரு உருவம் எடுத்த போது துர்கை அம்பாள் அவனை வதம் செய்தார். இந்த 9 நாள் போரும் சக்தியின் வெற்றியினை குறிக்கும் விதமகா விஜயதசமி, ஆயுத பூஜை அன்று நிறைவு பெறுகிறது.

இந்த வெற்றியினை குறிக்கும் விதமாக மொத்த விண்ணுலக சக்திகளையும், தெய்வ சக்திகளையும் காட்சிப்படுத்தி கொண்டாடுவது நம் மரபு. அந்த வகையில், இந்த 9 நாள் யுத்தத்தில் பங்குபெற்ற அம்சங்கள் யாவும் 9 நாட்கள் நவராத்திரி கொண்டாட்டத்தில் பூஜிக்கப்படுவது வழக்கம்.

அவரவர் அவர்களின் சக்திக்கேற்ப 1, 3, 5, 7, 9, 11 எனும் எண்ணிக்கையில் படிகைகள் அமைத்து கொலு பொம்மையை வைப்பார்கள். ஒவ்வொரு வருடமும் ஒரு பொம்மையாவது புதிதாக இருக்க வேண்டும் என்பது மரபு. இந்த பண்டிகை தமிழகத்தில் மட்டுமின்றி கொம்பே ஹப்பா எனும் பெயரில் கர்நாடகாவிலும், பொம்ம கொலுவு என்ற பெயரில் தெலுங்கு தேசத்தில் கொண்டாடப்படுவது வழக்கம்.

Tags:    

Similar News