துர்கை அம்மனுக்கு ராகு காலத்தில் எலும்பிச்சை விளக்கேற்றுவது ஏன்?

Update: 2022-12-13 00:45 GMT

சக்தி தேவியை வணங்கும் கோவில்களில் ஏராளமான சடங்குகள் பின்பற்ற படுவதுண்டு. குறிப்பாக நம் மரபில் துர்கை வழிபாடு மிக பிரசிதம். துர்கைக்கு மற்றிரு பெயர்களும் உண்டு. துரித நிவாரணி மற்றும் துக்கநிவாரணி என்பதாகும். துரிதம் என்றால் விரைவாக நம் துக்கத்தை நீக்குபவள் என்று பொருள். நவகிரகங்களில் முக்கியமானவரான ராகுவின் அதிபதியாக விளங்குபவள் துர்கை அம்மன்.

எனவே தான் துர்கை அம்மனை வழிபடுவதில் முக்கிய சடங்காக கருதப்படும் எலுமிச்சை தீபம் ராகு காலத்தில் ஏற்றப்படுகிறது. பெரும்பாலும் ஜோதிடத்தில் பிரச்சனை இருப்பின் அவர்களுக்கான பரிகாரமாக எலும்பிச்சை விளக்கேற்றுவதை பரிந்துரைப்பார்கள். மேலும் ராகுகாலத்தில் துர்கைக்கு விளக்கேற்றுவது நம்மை துன்பத்திலிருந்து விடுவிக்கும். பொதுவாக செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ராகுகாலத்தில் விளக்கேற்றுவது வழக்கம்.

செவ்வாய் கிழமையில் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரையும், வெள்ளி கிழமையில் காலை 10.30 முதல் நண்பகல் 12 வரையும், ஞாயிற்று கிழமையில் மாலை 4.30 முதல் 6 மணிவரையும் ராகுகாலங்கள் ஆகும். இந்த நேரத்தில் துர்கைக்கு விளக்கேற்றுவதால் நம் கர்ம வினைகள் உடனடியாக அன்னையின் அருள் பார்வையில் தீரும் என்பது நம்பிக்கை.

இந்த நேரத்தில் எலும்பிச்சையை இரண்டாக வெட்டி, எலும்பிச்சை சாற்றை மரத்திற்கு அர்ப்பணிப்பர். பின் சாறு பிழியப்பட்ட எலும்பிச்சையை விளக்காக மாற்றி அதில் திரியிட்டு அதன் விளிம்புகளில் குங்குமம், மஞ்சளிட்டு, எலும்பிச்சை விளக்கில் நெய்யூற்றி விளக்கேற்றுவர்.

குறிப்பாக இந்த ராகு கால விளக்கை துர்கை கோவிலில் ஏற்றுவது தான் உகந்தது. மேலும் இவ்வாறு தீபமேற்றும் போது வாய்ப்பிருப்பின் லலிதா சஹஸ்கரநாமத்தை உச்சாடணம் செய்வதால் அன்னையின் அருளை ஒருவர் பரிபூரணமாக பெற முடியும். மேலும் ஒற்றை எலும்பிச்சை விளக்கை ஏற்றாமல் ஜோடியாக விளக்கேற்ற வேண்டும். இவ்வாறு சரியான முறைகளை பின்பற்றி தீபமேற்றுவதால் ஆரோக்கியம், செல்வ வளம், மகிழ்ச்சி, என அனைத்தும் செளபாக்கியங்களையும் கிடைக்க பெறுவார்கள்.

அதிலும் குறிப்பாக திருமணம் ஆகாதவர்கள், குழந்தை வரம் வேண்டுபவர்கள் அவர்களின் கிரகநிலைக்கு ஏற்ப குறிப்பிட்ட வாரங்கள் தீபமேற்றி வர அவர்களின் குறை தீரும் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News