அனுமரின் அருளை பெற வெண்ணை சாற்றுவதன் தார்பரியம் என்ன? ஆச்சர்ய தகவல்

Update: 2022-11-04 00:45 GMT

நம் மரபில் அனுமர் வழிபாடு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அனுமர் என்பவர் பலதரப்பட்ட தெய்வீக பண்புகளின் கலவை ஆவார். உடல் பலம், மன பலம், அதீத புத்திகூர்மை, ஒப்பற்ற வீரம், பலம், தீவிரமான பணிவு என அனைத்து நற்குணங்களின் உட்சமாக திகழ்பவர் அனுமர். எனவே ஆரோக்கியம், செல்வ வளம் மற்றும் கோள்களின் தாக்கங்களில் இருந்து விடுபடுவதற்கு அனுமரை வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது.

அதனடிப்படையில் அனுமர் வழிபாட்டில் பல வகை உண்டு. அதில் மிகவும் பிரசித்தி பெற்றது அனுமருக்கு வெண்ணை சாத்துதலும், வெற்றிலை மாலையும். எதற்காக இந்த வழக்கம் வந்தது என புராணத்தை சற்று புரட்டி பார்க்கிற போது அதற்கான விடையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

ராமாயணத்தில் ராமன், ராவணன் போன்ற முன்னனி மாந்தர்களை தொடர்ந்து அனுமருக்கு மிக முக்கியமான இடம் ராமாயணத்தில் உண்டு. ஶ்ரீராமர் மீது அனுமர் கொண்டிருந்த தீவிரமான அர்ப்பணிப்பும் பக்தியும் நாம் நன்கறிந்ததே. இருப்பினும் இறுதியாக ராமாயண போரின் போது ராவணன் போருக்கு வந்த பிரமாண்ட ரதத்தை ஒத்த ஒரு ரதம் ராமனிடம் இருக்கவில்லை. அப்போது ஶ்ரீராமருக்கு ரதமாக இருந்து செயல்பட்டவர் அனுமர். அனுமரே ரதமாக மாறி ராமரை தோளில் சுமந்து போர் புரிந்தார்.

அப்போது ஶ்ரீராமரை தாக்க முடியாத ராவணன், அனுமரை தாக்க தொடங்கினான். அவனுடைய கூறிய வேல் பட்டு அனுமரின் உடலெங்கும் குருதி சொறிந்தது. போரின் முடிவில் அனுமரின் நிலை கண்டு கலங்கிய ஶ்ரீ ராமர் அந்த யுத்த பூமியில். அனுமரின் வலிக்கு நிவாரணமாக எந்த மருந்தையும் கண்டறிய முடியாததால், தூய வெண்ணையை அவர் காயம் பட்ட உடல் முழுவதும் சாற்றினார். ஶ்ரீராமரின் பரிசுத்தமான அன்பும் அக்கறையும், வெண்ணையின் தூய குணங்களும் இரண்டும் சேர்ந்து அனுமரை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுத்தது. அதன் தொடர்ச்சியாகவே இன்றும் அனுமருக்கு ஶ்ரீராமரின் பாதம் பணிந்து வெண்ணையை சாற்றும் வழக்கம் தொடர்கிறது.

அடுத்து, ஶ்ரீராமரின் செய்தியை சீதைக்கு அனுமர் உரைத்த போது அந்த வனத்தில் அனுமருக்கு வழங்க வேறு எதுவும் இல்லதாதால் சீதா தேவி வெற்றிலையை மாலையாக தந்தாள் என்பது வரலாறு.

இதனால் தான் இன்றும் அனுமரின் அருளை பெற வெண்ணை மற்றும் வெற்றிலையை நாம் அர்ப்பணித்து வழிபடுகிறோம்

Tags:    

Similar News