இந்து மரபில் எந்தவொரு நல்ல காரியத்திலும் கோலமிடுவது ஏன்?

Update: 2021-04-18 00:15 GMT

கோலமிடுதல் ஒரு கலை. ஆனால் இது வெறும் கலை மட்டுமல்ல. இது ஒரு ஆன்மீக குறியீடு. கலாச்சார அடையாளம். பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒரு வெளி .இந்த வரிசையில் நவீன காலத்தில் போராட்ட கருவியாக கூட கோலத்தை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

வண்ணமயமான பொடி அல்லது வெள்ளை நிற பொடி கொண்டு வீடுகள், அலுவலகங்கள் அதாவது ஒரு வாயில் படியின் முன்பு கோலம் இடுவது வழக்கம். பெரும்பாலும் அதிகாலையிலும், மாலை வேலையிலும் கோலம் இடுவது அந்த சுற்று சுழலுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. மேலும் கோலம் என்பது மங்களகரமான அம்சம். இது வீட்டினுள் இலட்சுமியை வரவேற்க இடப்படுவதாகவே ஐதீகம்.



சுப காரியம் நிகழும் எந்தவொரு விஷேசங்கள், பண்டிகையின் போது கோலமிடுவது மரபு.

கோலம் இடுவதன் முக்கியத்துவத்தை உணரவேண்டுமெனில் தென்னகத்தில் இதற்கெனவே பல பண்டிகைகள் உள்ளன. தமிழகத்தில் பொங்கலின் போதும், கேரளத்தில் ஓணம் பண்டிகையின் போது இன்னும் பல இடங்களில் பல விதமாக கோலமிடுதல் வழக்கம்.

இதன் ஆன்மீக தார்பரியம் என்னவெனில், வாயில் படியில் புள்ளிகள் இட்டு வளைவு நெளிவுடன் கோலமிடும் போடு,, தீய சக்திகள் வீட்டினுள் நுழைய முற்படும் எனில், இந்த கோலத்தை கண்டு அஞ்சும். பெரும்பாலான கோலங்கள் நட்சத்திர வடிவினை மையப்படுத்தி உருவாக்கப்படுவதும் இதனால் தான்.


இவற்றை தாண்டி, இதன் அறிவியல் காரணம் என்பது வண்ணமயமான வடிவத்தை ஒருவர் வீட்டின் முன் பார்க்கிற போது, அவருடைய மனம் ஆனந்தம் கொள்ளும். மேலும் இந்த ரம்மியமான வடிவமும் காட்சியும் வீட்டிற்கு போதுமான நல்ல அதிர்வுகளை ஈர்த்து வழங்கும். மேலும் வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் எந்த மனநிலையில் வந்தாலும், வாசலில் இந்த காட்சியை காண்கிற போது அவர்களின் எண்ணமும் செயலும் நல்ல விதமாகவே மாறும் என்பது நம்பிக்கை.

அடிப்படையில் இதன் மற்றொரு கருத்துருவாக்கம் என்னவெனில், முந்தைய காலங்களில் கோலம் என்பது அரிசி மாவில் இடப்பட்டு வந்தது. காரணம் அவை பூச்சிகள், எறும்புகளுக்கு உணவாக அமையும் என்பதால். காலம் மாற்றத்தால் அரிசி மாவு, கோலப்பொடியாகாவும், இன்றைய நவீன காலத்தில் சில வீடுகளின் முன் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களாக கூட காண முடிகிறது. நம் மரபை ஒருபோதும் விடாத தன்மையே நமக்கு நலம் பயக்கும்.

Tags:    

Similar News