கோவிலுக்கு சென்றால் சிறிது நேரம் அமர வேண்டும் என்பது ஏன்?

Update: 2022-02-17 00:45 GMT

இறைவனை எங்கிருந்தும் வணங்கலாம். தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் எனும் போது கோவிலுக்கு செல்வது ஏன்? என்கிற கேள்வி பலருள் ஏழுகிறது. இதை பெரும் ஞானி ஒருவரிடம் கேட்ட போது மாட்டின் உடலில் தான் பால் இருக்கிறது எனும் போதும், அதற்குரிய இடத்தில் திருகினால் பால் வரும் என்றால், நீக்கமர நிறைந்திருக்கும் இறைவனை அதற்குரிய இடத்தில் வழிபடுவதால் தனி சிரப்பு இருப்பது இன்றியமையாததே.

அதனால் தான் கோவில்களில் கடவுளை வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி நம் மரபில் கட்டுமானம் என்பது சாதாரண விஷயமல்ல. நம் முன்னோர்கள் மிகவும் ஆராய்ந்தே கோவில்களை அமைத்துள்ளனர் பூமியின் காந்த அலைகள் அதிகம் பரவ கூடிய இடத்தில் அமைந்திருக்கும். அல்லது கோவிலில் இருக்கும் நல்லதிர்வுகள் அந்த ஆற்றலை ஈர்க்க உதவியாக அமையும் .

ஒரு மனிதனின் ஆன்மீக பயணத்திற்கு தேவையான இந்த நல்ஆற்றலை உள்வாங்க வேண்டும் என்பதற்காக தான் கோவிலில் நாம் அதிக நேரம் செலவிடும் படியான வழிபாட்டு முறைகளை உருவாக்கியிருக்கிறோம். கடவுளுடைய ஆசிர்வாதம் கிடைப்பதென்பது நமக்கு ஏதோவொரு பொருள் கிடைக்கப்போவதை போன்றது அல்ல. ஆசி என்பதே நல்ல ஆற்றலை நாம் பெறுவது தான்.

இதனை ஒட்டியே அனைத்து வழிபாட்டு சடங்குகளும் உருவாக்கப்பட்டன. ஆலயத்தில் ஏற்றப்படும் தீபம் மென்மையான கதகதப்பை நேர்மறை ஒளியின் ஆற்றலையும் வழங்குகிறது. கற்பூரம், தூபம் போன்ற வாசனை பொருட்கள் நல்ல வேதியல் மாற்றத்தையும் நமக்குள் நிகழ்த்துகிறது. இது போல், அனைத்து நல்ல அம்சங்கள் நிறைந்த இடத்தில் நாம் இன்னும் அதிகமான நேரம் இருக்க வேண்டும் என்பதே தார்பரியம். அதனாலேயே, கோவிலில் தரிசனத்திற்கு பிறகு சில நிமிடங்கள் அமர வேண்டும் என்கின்றனர்.

இதற்கு இன்னும் சில காரணங்களும் உண்டு, கோவிலில் தரிசனத்திற்கு பின்பாக பிரகாரத்தை சுற்றி வரும் பழக்கம் நம் தென்னகத்தில் அதிகம் உண்டு. முந்தைய காலங்களில் கோவில்கள் மிக பிரமாண்டமானதாக இருக்கும். அதேவேளையில் 11, 15, துவங்கி இன்னும் அதிக எண்ணிக்கையில் சுற்றி வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அப்போது பிரதக்‌ஷணம் முடிந்த பின் ஓய்வாக அமர்வது ஒரு வழக்கமாக இருந்தது.

அடுத்து கோவில்களில் சில நேரம் அமர்வதால், நண்பர்கள் குடும்பத்தார் தெரிந்தவர் போன்றவர்களோடு சிறிது நேரத்தை செலவிடலாம். இது உறவுகள் மேம்பட உதவும். மேலும் இறைவனை தரிசித்த கையோடு சிறிது நேரம் அமர்ந்து, பாடல்கள், துதிகள் பாடி இறைவனின் சிந்தனையில் திளைத்திருப்பது நம் மன நலத்திற்கு மிக உகந்ததாக அமையும்.

Tags:    

Similar News