மற்ற நதிகளை காட்டிலும் கங்கையின் நீர் தெய்வீகமானதாக கருதப்படுவது ஏன்?

Update: 2022-09-21 00:45 GMT

இந்து மரபில் ஒரு ஜனனம் அல்லது மரணம் நிகழ்ந்தால் உடனடியாக வீட்டை புனித கங்கை நீர் தெளித்து சுத்திகரிப்பது வழக்கம். வீட்டில் முதியவர்கள் மரணப்படுக்கையில் இருக்கையில் அவர்களுக்கு அருந்த கங்கை நீர் கொடுப்பது வழக்கம். இறந்த பின் அவர்களின் அஸ்தியை கங்கை நீரில் கலக்க பெரும்பாலனவர்கள் முற்படுவார்கள்.

கங்கை நீரெனும் புனித நீரை தொட்டாலே பாவங்கள் கரைந்துவிடும், முற்பிறவியின் பாவங்கள் மட்டுமின்றி இந்த பிறவியின் பாவங்கள் கூட கரைந்துவிடும் என்பது நம்பிக்கை. மற்றும், இறந்தவர்களின் அஸ்தியை கங்கை நீரில் கரைக்கப்படுமாயின் இறந்தவர்கள் முக்தியை பெறுவதற்கான பெரும் வாய்பாக அது கருதப்படுகிறது.

கங்கை நீர் குறித்து பலவிதமான புராணக்கதைகள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக இந்த கங்கையை பிரம்மா படைத்தார் என்றும் குறிப்பஅக விஷ்ணுவின் பாதத்தில் இருந்து வடிந்த நீரினை எடுத்து இதனை உருவாக்கினார் என்பதால் மும்மூர்த்திகளில் இரு மூர்த்திகளின் இருப்பை பெற்றதால் மற்ற நதியை காட்டிலும் இந்த நதி புனிதத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அரசர் சாகர், தேவலோகத்தில் இருப்பவர்களை மகிழ்விக்க ஒரு யாகம் நடத்தினார் அதில் ஒரு இடத்தில் தன் 61 மகன்களில் 60 மகன்களை மகா ரிஷி ஒருவரின் சாபத்தால் இழந்த போது,

அலைந்து கொண்டிருந்த ஆத்மாவை சாந்தப்படுத்த வேண்டி கங்கா தேவியை பூமியில் பாய்ந்தோடுமாறு அழைத்தாகவும் அதன் படி சிவபெருமானின் ஜடாமுடி வழியே பாய்ந்திறங்கியதாகவும் ஒரு கதை உண்டு. பல வரலாற்று ஆய்வாளர்கள் சக்ரவர்த்தி அக்பர் தன் மனைவியின் மூலம் இந்து மதத்தில் கங்கைக்கு இருக்கும் புனிதத்துவத்தை உணர்ந்து அவரே அந்நீரை அருந்தியிருப்பதாகவும் பல குறிப்புகள் உண்டு.

மற்றொரு வரலாற்று செய்தி யாதெனில், ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு செல்லும் போது அவர்கள் இந்த கங்கை நீரை பத்திரப்படுத்தி எடுத்து செல்வார்களாம், இவ்வாறு எடுத்து செல்லும் போது அந்த நீர் கெட்டு போவதில்லை. ஆனால் அவர்களின் ஊர் நீரை இங்கே எடுத்து வரும் பொழுது அந்த நீர் கெட்டு விடுவதாக சில செய்திகள் உண்டு. அறிவியால் அறிஞர்கள் கங்கையில் பாக்ட்ரீயா பேஜ் எனும் உயிரி இருப்பதாகவும் அது பேக்ட்ரீயாக்களை அழித்து விடுவதாகவும் சொல்கிறார்கள். அதனால் கங்கை நீரை பருகுவது ஆரோக்கியமானது என்றும் கருதப்படுகிறது.

Tags:    

Similar News