சிவனுக்கு ஏன் துளசியை அர்பணிக்க கூடாது? புராணம் சொல்லும் ஆச்சர்ய தகவல்.!

சிவனுக்கு ஏன் துளசியை அர்பணிக்க கூடாது? புராணம் சொல்லும் ஆச்சர்ய தகவல்.!

Update: 2020-11-27 05:45 GMT

துளசி செடியை வீடுகளில் வளர்ப்பதால் எந்தவொரு நோய்களும் அண்டாது, மற்றும் யமன் மற்றும் துர் தேவதைகள் வீட்டினுள் நுழையாது என்பது நம்பிக்கை. கடவுளின் மறுரூபமாக துளசி செடி கருதப்படுவதால், துளசிக்கு இந்து மரபில் எப்போதும் ஒரு தனியிடம் உண்டு.

ஏராத்தாள அனைத்து கோவில்களிலும் துளசி செடியை நாம் காண முடியும். மேலும், சிவன் வழிபாட்டை தவிர அனைத்து விதமான தெய்வீக வழிபாடுகளிலும் துளசி இலையை பயன்படுத்துவார்கள். மிக குறிப்பாக விஷ்ணுவை வழிபடுவதற்கு துளசியே ஏதுவானது.

சிவனுக்கு துளசி செடியை அர்பணிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் சொல்லப்படுவதுண்டு. துளசியின் மணாளனான ஜலந்தர் எனும் அரக்கனை சிவபெருமான் வதைத்த காரணத்தால். சிவபெருமானை தன்னுடைய இலைகள் கொண்டு வழிபடக்கூடாது துளசி சபித்தாக ஒரு வரலாறு செவி வழி சொல்லப்படுகிறது.

ஆன்மீகத்தை தாண்டி, அறிவியல் ரீதியாகவும் துளசி செடி என்பது அதீத மருத்துவ குணங்களை கொண்டாதாக கருதப்படுகிறது. துளசியில் உள்ள லினோலிக் அமிலம் நம் சருமத்திற்கு மிகவும் நல்ல குணங்களை தரக்கூடியது. இந்த துளசியை நாம் நினைக்கும் பொழுதெல்லாம் பறித்துவிட கூடாது என்கிறது சாஸ்திரம்.

மற்றொரு வரலாற்றில் துளசி என்பது மஹாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. அதனாலேயே சில சமூகத்தினரின் திருமணத்தில் மணமக்களுக்கு துளசியால் ஆன மணமாலை கூட அணிவிக்கப்படுவதுண்டு. அதுமட்டுமின்றி, சகல விதமான மங்கள காரியங்களிலும் துளசியை பயன்படுத்துவதல் இதனால்.

துளசி இலையை பறிக்கலாம், ஆனால் குறிப்பிட்ட நாட்களில் அவற்றை இரண்டாக கிழிக்க கூடாது. அவ்வாறு கிழிப்பது பெரும் பாவமாக கருதப்படுகிறது. உதாரணமாக ஏகாதெசி, இரவு நேரங்கள், சந்திர மற்றும் சூரிய கிரகணம் போன்ற நாட்களில் துளசி இலையை பலவிதமாக கிழிக்க கூடாது. அதுமட்டுமின்றி துளசி செடி வீட்டில் வளர்க்கப்படுகிறது எனில். அந்த செடியிலிருந்து இலையை பறிப்பதற்கு முன் ஒரு விளக்கை மாலை நேரத்தில் செடியின் முன் ஏற்றி வைத்து பின் பறிக்க வேண்டும். இவ்வாறு விளக்கு ஏற்றுவது, நாம் இலையை பறிப்பதற்கான அனுமதியை துளசியிடம் கேட்பதற்கு ஒப்பானது ஆகும்.

சமயங்களில் உலர்ந்த துளசி இலை, கீழே விழுவதுண்டு. அவ்வாறு விழுகும் எனில் அது அந்த செடியின் மணலிலேயே புதைக்கப்படுவட்து நல்லது.

Similar News