மாலை நேரம் உணவருந்தக் கூடாது ஏன்?
மாலை நேரம் உணவு அருந்த வேண்டாம் என்று முதியோர்கள் கூறிய காரணம் என்ன என்பது பற்றி தகவல்
மாலை நேரம் உணவருந்த வேண்டாம் என்று முதியோர்கள் அடுத்த தலைமுறையை போதித்துள்ளனர். ஒளி மங்கி இருள் வரும் நேரம் ஆனதால் அந்த நேரம் இறைவனை ஆராதிப்பதற்கான நேரம் ஆகும். எனவே மாலை நேரம் உணவருந்தக் கூடாது என்று கூறப்படுகிறது.
ஆனால் நிஜமான காரணம் வேறு. ஆயுளும் உடல்நலமும் நிலைநிறுத்த சுத்தமான உணவு உட்கொள்வது எல்லா ஜீவராசிகளுக்கும் மிகமுக்கியம் .அந்த உணவு அருந்த வேண்டிய முறையையும் நேரத்தையும் கூட ஆச்சாரியர்கள் தெளிவாக போதனை செய்துள்ளனர். இப் போதனைகளை அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் தந்துள்ளனர்.
சூரியன் மறையும் நேரத்துக்குபின் இருட்டு பரவத் தொடங்கும் நேரமே மாலை நேரம். நவீன காலத்தைப் போல மின் விளக்குகள் இல்லாத காலத்தில் மங்கிய வெளிச்சத்தில் இருந்து உணவருந்தும்போது விஷயங்களும் அசுத்தங்களும் உணவில் படிந்து ஆபத்தை உண்டாக்கும் என்பதை நமக்கு புரிந்து கொள்ள முடியும்.
சூரியன் மறைவதால் இயற்கையில் கண்டுவரும் வேதி மாற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. கிழங்கு வகைகளும் கீரைகளும் உணவின் முக்கிய அம்சமாக இருந்த காலத்தில் இவை மாலைப்பொழுதில் பயன்படுத்துவது நல்லதல்ல என்று முன் தலைமுறை கண்டறிந்ததனால் மாலைப்பொழுதில் உணவருந்த வேண்டாம் என்று போதித்திருந்தனர்.