மாலை நேரத்தில் தலை ஏன் வாரக்கூடாது?

மாலை நேரத்தில் தலை ஏன் வாரக்கூடாது?

Update: 2020-11-06 06:00 GMT

உங்கள் மூதாதையர் உங்களிடம் சொல்லியிருக்கிறார்களா மாலை நேரத்தில் தலை வாரக்கூடாது என்று? அவர்கள் வெறுமனே சொல்லவில்லை. நம் முன்னோர்கள்  அனைத்தையும் அறிவியல் ரீதியிலேயே உணர்ந்து சொல்லி இருக்கிறார்கள். 

இதில் ஆன்மீக ரீதியாக சொல்லப்படும் யாதெனில் மாலை நேரத்தில்  தீய சக்திகள் வெளிப்புறமாக உலவும் காலம். எனவே தலை முடி போன்ற விஷயங்கள் தாந்த்ரீக செயல்களில் அதிக முக்கியதுவம் பெறுபவை எனவே அதனை நாம் வெளியே வீசுவது உகந்தது  அல்ல. குறிப்பாக பௌர்ணமி போன்ற நாட்களில் தலையை வாரி வெளியே போடுவதால் அவை தீய சக்திகளுக்கு அழைப்பாக  அமைந்து விடும் என்பது நம்பிக்கை. 

 அடுத்ததாக தலை வாருதல் குறித்து சொல்லப்படும் மற்றோரு நம்பிக்கை என்னவெனில், தலையை வாரும் போது சீப்பினை தவற விட்டால் அது தவறான செய்தி ஒன்று வரவிருப்பதை உணர்த்தும் அறிகுறி எனப்படுகிறது. மற்றோரு காரணம், மாலை நேரம் என்பது வீடுகளில் லட்சுமியின் வரவை எதிர்பார்க்கும் தருணம் அப்போது நாம் தலை முடி கற்றைகளை வெளியே விடுத்தால் அது நல்ல சமிக்கையாக இருக்காது. 

இதன் அறிவியல் காரணம் என்பது, அன்றைய காலத்தில் போதிய  விளக்குகளும், வெளிச்சமும் இருந்திருக்கவில்லை எனவே முடியை வாருகிற போது அது உணவுகளில், பூஜை அறையில் மற்ற இடங்களுடன்  கலக்ககூடும். மற்றொன்று அன்றைய காலத்தில் தலை வாருவதற்கு சீப்பை போன்ற பாதுகாப்பான உபகரணங்கள் இருந்திருக்க வில்லை. அதனால் காயம் ஏற்பட கூடும் போன்ற காரணங்கள் இருந்திருக்கலாம். 

இன்றைய துரித சூழலில் தலை வாருதல் மற்றும் இதர தனிப்பட்ட பராமரிப்பு என்பது அவரவர் பணியை வாழ்க்கையை முறையை சார்ந்து இருக்க துவங்கி விட்டது . எனவே நம்மால் ஒரு கலாச்சரத்தை பாரம்பரிய கூற்றுகளை எவ்வளவு போற்றி பாதுகாக்க முடியுமோ அத்தனை தூரம் அதனை காக்கலாம். நல்ல அதிர்வுகளை வீட்டினுள் ஈர்க்கிற அனைத்து விஷயங்களையும் செய்வது நல்லது தானே!! 

Similar News