மாலையில் வீட்டை சுத்தம் செய்யக்கூடாது என்பது ஏன்? என்ன சொல்கிறது சாஸ்திரம் !

Update: 2021-11-09 00:30 GMT

அன்பு, ஆனந்தத்திற்கு இணையாக செல்வத்தை சொல்ல முடியாது. ஆனாலும் அதன் மதிப்பு, மரியாதை முக்கியத்துவத்தை யாராலும் ஒதுக்கிவிட முடியாது. உழைப்பும், கடின முயற்சியும் நல்ல வழியில் பெற்ற பணம் மட்டுமே ஒருவருக்கு நிரந்தரம். மேலும் ஒருவரின் உழைப்பை பொருத்தே அவரின் செல்வம் பெருகும் என்பதும் உண்மை. இந்த உண்மைக்கு நிகரான மற்றொரு கூற்று யாதெனில், சாஸ்திரங்களின் படி, நம்முடைய வெளிப்புற சூழலை நாம் வைத்து கொள்ளும் விதம் சில நல்ல அதிர்வுகளை, நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் வகையில் அமையும். இது நமக்குள் ஒர் நல்ல சூழலை உருவாக்கி, நாம் மேலும் உழைக்கும் வகையில் அது உளவியல் ரீதியாக தூண்டும் எனும்படியால் சில செயல்கள் நம் செல்வ வளத்தை கூட்ட உறுதுணையாக இருக்கிறது என்கின்றன சாஸ்திரங்கள்.

உதாரணமாக, சிலர் கழிவறையை தொடர்ச்சியாக சுத்தம் செய்ய மாட்டார்கள். பெரும்பாலும் ஈரப்பதத்துடன் குளியளறை இருத்தல் உகந்ததல் அல்ல. குளிக்கும் நேரம் மற்றும் பயன்படுத்தும் நேரம் தவிர்த்து உலர்ந்திருப்பதும், சுத்தமாக இருப்பதும் அவசியம். இவ்வாறு செய்வதால் ஜோதிடத்தில் உள்ள சந்திரனின் இடம் மிகவும் நிறைவாக இருக்கும். இது நம் பொருளாதார சிக்கல்களின் தீவிரத்தில் இருந்து நம்மை விடுவிக்கும்.

உணவு ரீதியாக இரண்டு விஷயங்கள், ஒன்று ஒரு சிலர் உணவை தட்டில் மீதம் வைக்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். மற்றொன்று பயன்படுத்திய பாத்திரங்களை உடனடியாக சுத்தம் செய்யாமல் விட்டு வைத்திருப்பார்கள். இந்த இரண்டுமே நல் ஆற்றலை பெறுவதற்கு ஏதுவானது அல்ல.

படுக்கையை சுத்தமாக வைத்திருத்தல். பகலில் எழுந்தவுடன் முதல் வேலையாக படுக்கையை சுத்தம் செய்தல் அவசியம். இரவு வரையிலும் படுக்கையை சுத்தம் செய்யாமல் இருப்பதால் சந்திரன் நமக்கு தீய விளைவுகளை விளைவிக்க கூடும். மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பின் வீட்டை பெருக்குவதை தவிர்க்கவும். முந்தைய காலத்தில் மின்விளக்கு இல்லாமல் இருந்த போது மாலையில் பெருக்குவதால் சில தேவையுள்ள பொருட்களும் தவறுதலாக வெளியேற்றப்பட்டுவிடும் என்பதால் அவ்வாறு ஒரு கூற்று இருந்ததும் என்றும் சொல்கின்றனர். எனினும் மாலையில் வீட்டை சுத்தம் செய்தல் சரியான சாஸ்திர முறை அல்ல.

வீட்டின் வடக்கு திசையை சுத்தமாக வைத்து கொள்வதும் செல்வத்தை ஈர்க்க உதவும்.

Image : DT Next

Tags:    

Similar News