உட்கார்ந்த நிலையில் உணவருந்த வேண்டும் என்பது ஏன்?
உட்கார்ந்த நிலையில் உணவருந்துவதால் ஏற்படக்கூடிய நன்மைகள்
உணவருந்தும் கலாச்சாரம் மாறி வர இன்று நம் நாட்டில் நடந்தும் ,நின்று கொண்டும் உணவருந்துகின்றோம்.குழந்தைகளுக்கும் உண்ணப் பழக்குகின்றோம். தரையில் சப்பணமிட்டு உட்கார்ந்து முன்பக்க பார்வையுடன் உணவருந்த வேண்டும் என்பது தொன்று தொட்டுள்ள பழக்கம் .
தரையில்பலகையிட்டு சப்பணமிட்டு அமர்ந்து நம் நாட்டினர் உணவு அருந்துகின்றனர்.காலின் மேல் கால் வைத்து டைனிங் டேபிளுக்கு முன்னிருந்து டெலிவிஷன் நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டே உணவருந்துதைவிட நம் முன்னோர்களின் பாணி அழகு உள்ளது. அவ்வாறு அமர்ந்து உண்பது உடலுக்கு சில பயனுள்ளதாக நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர்.
ஆனால் சுகபோகங்களில் நடு கடலில் அலைந்து திரியும் நவீன மக்கள் இந்த வாழ்க்கை இறைவன் அருளியது என்பதை உணர்வதில்லை .நாம் உணவருந்தும் போது உடலில் அசைவு ஏற்படுகின்றது என்று இன்றைய சாஸ்திரம் அறிவிக்கின்றது. இந்த அசைவு மூட்டுகளுக்கு அதிக பாரம் உண்டாக்கும் .
அமர்ந்த நிலையில் உணவருந்தினால் இந்த பாரத்தை குறைக்க இயலும் மேலும் நின்றுகொண்டு உணவருந்தினால் மிதமிஞ்சி உணவருந்த வாய்ப்புண்டு அதிகமாக உண்ணுவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது நாம் அறிவோம் .
வயிறு நிரம்ப உண்ணாதவர்கள் பல நோய்களில் இருந்தும் விலகி இருப்பார்கள் என்று மருத்துவத் துறைப் பலவழியில் அறிவித்துள்ளது.