வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்கக் கூடாது ஏன்?

வடக்கு திசையில் தலைவைத்துப் படுப்பது உடலுக்கு நன்மை தராது

Update: 2022-08-03 11:15 GMT

வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்று முதியோர்கள் கூறும்போது சிறுவர்கள் பொதுவாக அதை பொருட்படுத்துவதில்லை.

வாஸ்து சாஸ்திரப்படி தூங்குவதற்காக தலை வைப்பது கிழக்கு பாகத்தில் ஆனால் மிகவும் உத்தமம் .அது இயலாமல் போனால் தெற்கு திசையில் தலை வைக்கலாம்.

காந்தத்திற்கு ஈர்க்கும் சக்தி அளிப்பது காந்த விசைக்கோடுகள். அதாவது காந்த பல ரேகைகள் .இந்த பல ரேகைகள் காந்த மண்டலத்தில் செயல்படுகின்றன.

ஒவ்வொரு காந்தத்திற்கும் தென் துருவமும் உண்டு .வட துருவமும் உண்டு. தெற்கில் ஆரம்பிக்கும் பல ரேகைகள் வடக்கு முனையில் முடிகின்றன .

மேலே கூறப்பட்ட பல ரேகைகள் பூமியில் இருந்து புறப்பட்டு வடதுருவத்தில் வந்து சேருகின்றன.

பூமியின் ஈர்ப்பு சக்தியும் இவற்றுடன் தொடர்புடையவை. மனித உடலிலும் மிகக் குறைந்த அளவிலான காந்தசக்தி செயல்படுகின்றது என்று கண்டறிந்துள்ளனர்.

வடக்கே தலை வைத்து படுக்கும் போது பூமியின் காந்த மண்டலமும் மனித உடலின் காந்த மண்டலமும் எதிர்த்து செயல்படும் நிலை ஏற்படுகின்றது இது வழக்கமாக நிகழ்ந்தால் அதாவது

வடக்கே தலை வைத்துப்படுப்பதால் மனிதனில் ஹிஸ்டீரியா என்ற நோயின் பாதிப்பு நாளடைவில் உண்டாகலாம் என்று நவீன மருத்துவத்துறை வெளிப்படுத்தியுள்ளது .

Similar News