ஆன்மீக பாதையில் சூரியனை பிரபஞ்சத்தின் ஆன்மா என அழைத்து வணங்குவது ஏன்?

Update: 2021-04-28 23:45 GMT

நம்மில் பெரும்பாலனவர்களின் முந்தைய தலைமுறையினர் ஒவ்வொரு நாளும் சூரியனை தரிசித்து அவருக்கு நீரை அர்பணித்து வணங்கி வந்ததை நாம் கண்டிருக்கலாம். அதற்கான காரணம், சூரியனை வணங்குவது என்பது ஆற்றலை நம்முள் பெறுவதற்கான முக்கிய வழி. அதிகாலை எழுந்து கதிரவனுக்கு நீரை அர்பணிப்பதால் நம்முள் நல்ல அதிர்வுகள் நிரம்பி அந்த நாளே நன்மைமிக்கதாக அமையும் வாய்ப்புகள் அதிகம்.

நமக்கு வாழ்வில் ஏதாவது துன்பம் வந்தால் கூட, நிச்சயம் விடியல் வரும் என்று ஆறுதல் சொல்பவர்களை நாம் கண்டிருக்கிறோம். இயல்பாகவே, விடியல் என்பது உளவியல் ரீதியாக நேர்மறையான அம்சமாக இருக்கிறது.



எனவே சிறப்பு வாய்ந்த அந்த விடியலுக்கு நீரை அர்ப்பணித்து வணங்குவதால் நமக்கு நன்மைகள் ஏற்படுகின்றன. இந்து மரபின் படி சூரியனை "பிரபஞ்சத்தின் ஆன்மா" என்று அழைக்கிறார்கள். சூரியன் தரக்கூடிய ஒளியானது ஒரு மனிதருக்கு ஞானத்தை வழங்கக்கூடியது. அதுமட்டுமின்றி சூரியன் உமிழ்கின்ற வெளிச்சம் நமக்கு நல்ல பாதையை காட்டும் என்று நம்பப்படுகிறது.



இந்து புராணங்களின்படி சூரியனை வணங்குவதால் பல அற்புதமான நன்மைகளை சூரிய வணக்கதை மேற்கொள்பவர்கள் பெற்றிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக சூரியனுக்கு நீரை அர்ப்பணித்து வருவதனால் நம் தனிப்பட்ட வாழ்விலும் ஒரு சுய ஒழுக்கம் ஏற்படுகிறது. அந்த சுய ஒழுக்கத்தால் நம்முடைய உடல் மனம் மற்றும் ஆன்மீக ஆற்றல்கள் சமநிலை அடைகிறது. சூரியனிலிருந்து எழுகிற முதல் கதிரை நாம் வணங்குகிற பொழுது நம்முள் அந்த நாளின் வெற்றிக்கான வெளிச்சம் கிடைக்கிறது.

தினசரி சூரிய தேவனை வணங்கி குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஓம் சூர்யாய நமஹ என்ற மந்திரத்தை சொல்வதனால் சகலவிதமான நன்மைகளையும் யோகங்களையும் சௌபாக்கியங்களையும் வாழ்வில் பெறமுடியும். அதிகாலையில் எழுந்து, தூய்மையான ஆடை அணிந்து சுத்தமாக நீராடி, செம்பு பாத்திரத்தில் தூய்மையான நீரை நிரப்பி, அதில் அஷ்டகந்தம், சிவப்பு நிற மலர்கள் மற்றும் அக்ஷதை ஆகியவற்றை இட்டு சூரியனுக்கு உகந்த மந்திரத்தை சொல்லி அந்த புனித நீரை அர்ப்பணிக்க வேண்டும். அதன்பின் சூரியன் இருக்கும் திசையை நோக்கி கீழே விழுந்து பணிந்து வணங்க வேண்டும். இது பல ஆச்சர்யமான நன்மைகளை நமக்கு வழங்கும்.

Tags:    

Similar News