செறிவான பாரம்பரியம் நீண்டகால மரபு, காலங்காலமாக தொன்றுதொட்டு வரும் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு பெயர் போனது நமது இந்து மரபு. அதற்கேற்றார் போல இந்தியா முழுவதிலும் ஆயிரக்கணக்கான ஆலயங்களை நம்மால் காண முடியும். பல்வேறு வடிவத்தில், வடிவமைப்பில், இடத்தில், பலவிதமான கோவில்கள். இந்த கோவில்களுக்கு ஒருவர் செல்வது என்பது கடவுளின் ஆசிகளை பெறுவதற்கு மாத்திரம் அல்ல அமைதியான மனநிலையை பெறுவதற்கும் தான்.
அதுமட்டுமின்றி கோவிலுக்கு செல்வதால் ஒருவருக்கு ஏற்படும் அறிவியல் நன்மைகளை இங்கு காண்போம்.அடிப்படையில் கோவில் என்பதே நேர்மறை ஆற்றலின் குவியல் என்று சொல்லலாம். அளப்பறியா ஆற்றல் நிறைந்த இடம் கோவில், அந்த ஆற்றலின் மையமாக விளங்கும் இடத்தையே நாம் கர்பகிரஹம் அல்லது மூலஸ்தானம் என அழைக்கிறோம். அந்த ஒட்டு மொத்த ஆற்றலின் மைய பகுதியில் கடவுளை இருத்தி வணங்குகிறோம்.மேலும் கோவில் முழுவதிலும் மின்காந்த அலைகள் மற்றும் நல்ல அதிர்வுகள் நிரம்பியிருக்கிறது.கோவிலுக்குள் நுழையும் ஒருவர் அதனை முழுவதுமாக உணர வேண்டும் என்பதற்காக தான் காலணிகளை வெளியே கழற்றி வைக்க அறிவுருத்தினர். வெறும் காலில் நடப்பதால் அந்த அதிர்வுகளை உணர்ந்து உள்வாங்க முடிகிறது. காலணிகளை கழற்றுவது என்பது மரியாதையின், நன்றி தெரிவிப்பதின் வெளிப்பாடு. அதே வேளையில் அதற்கு பின் இப்படியொரு அறிவியல் காரணமும் உண்டு.
மேலும் சற்று வெளிச்சம் குறைவாக கர்ப்பகிரகங்கள் இருப்பதை நாம் காண முடியும். இதன் காரணம், கருமையான இருளில் சிறிய கற்பூர ஒளி அல்லது தீபம் கொண்டு ஆரத்தி காட்டப்படும் போது, அந்த இருளில் எழும் மென்மையான ஒளிக்கீற்று நம் கண்களின் புலன்களுக்கு நன்மை அளிப்பதாக உள்ளது. இதனால் நம் பார்வை புலன் தூண்டப்படுகிறது.அதுமட்டுமின்றி கோவில்களில் தீர்த்தமாக வழங்கப்படுவது துளசி நீர்.
மேலும், கோவில் தீர்த்தத்தை பெரும்பாலும் செம்பு பாத்திரத்தில் வைத்திருப்பது வழக்கம். 8 மணி நேரம் வரை துளசியை செம்பு பாத்திரத்தில் ஊற வைத்து அதை பருகுகிற போது ஒருவருக்கு ஏற்படும் மூன்று விதமான தோஷங்கள். அதாவது வாதம், கபம், பித்தம் ஆகிய மூன்று தோஷங்களும் நீங்குகிறது என்பது நம்பிக்கை. நல்லதிர்வுகள் நிரம்பிய அந்த நீரை பருகுகிற போது நமக்குள் புத்துணர்வு பிறக்கிறது.
இவ்வாறு நாம் உற்று கவனித்தால், ருசி, பார்வை, கேட்கும் திறன், உணரும் திறன், நுகரும் தன்மை ஆகிய ஐந்து புலன்களும் நல்லதிர்வுகளால் தூண்டப்படும் இடமாக கோவில் இருக்கிறது. அதனாலேயே நம் மரபில் கோவிலுக்கு செல்வது மிகவும் புனிதமானதாகவும், அவசியமானதாகவும் கருதப்படுகிறது.
Image: Facebook