இறைவனுக்கு தேங்காய் உடைக்கும் பழக்கம் ஏன்? ஆச்சர்ய காரணம்!

இறைவனுக்கு தேங்காய் உடைக்கும் பழக்கம் ஏன்? ஆச்சர்ய காரணம்!

Update: 2020-12-04 05:30 GMT

மிக எளிமையான ஒரு பொருள் தேங்காய். ஆனால் இந்த தேங்காய்க்கு இருக்கும் மகத்துவம் அளப்பரியாதது ஆன்மீக ரீதியாகவும் சரி, ஆரோக்கிய ரீதியாகவும் சரி தேங்காய் அற்புத நலன்கள் நிரம்பியது.

தேங்காய் என்பதை சமஸ்கிருதத்தில்  நரிகேல்லா என்பர். இதனை ஶ்ரீ பழம் என்றும் அழைப்பர். எனில் புனித பழம் என்று பொருள். இறைவனுக்கு அர்பணிக்கப் படுவதாலேயே மஹா பழம் என்றும் அழைப்பர். வேத புராணங்களில் பெருமளவிலான குறிப்புகள் தேங்காய் குறித்து இல்லையெனினும், புராணங்கள், இதிகாசங்களில் தேங்காய் குறித்து ஏராளமான செய்திகள் உண்டு.

இந்த பழத்தின் ஆதியில் இந்தோனேசியாவில் உருவானது முதலாம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் நுழைந்தது தேங்காய். இந்து மரபில் பெரும்பாலான மங்கள காரியங்கள், தொடக்க நிகழ்ச்சிகள், சுப காரியங்கள் என அனைத்து இடத்திலும், வழிபாடுகளிலும் தேங்காயை பயன்படுத்துவது வழக்கம்.

சில வீடுகளில் வாசலில் கூட தேங்காயை கட்டியிருப்பதை நம்மால் காண முடியும். தேங்காய் என்பது குலம் தளைப்பதன் அறிகுறி. எனவே பிள்ளை வரம் வேண்டுவோர் தென்னைக்கு நீர் வார்த்தால் விரைவில் சந்தான பாக்கியம் கிட்டும் எனவும் சொல்லப்படுகிறது.

வட இந்தியாவில் தென்னை மரமும், வில்வமும் மிகவும் புனிதத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதற்கு இணையாக தென்னிந்தியாவில் தேங்காயை மக்கள் வணங்கி போற்றுகின்றனர். எந்தவொரு வழிபாட்டிற்கு முன்பும், தேங்காயை இரண்டாக உடைத்து இறைவனுக்கு படைப்பது வழக்கம்.

இந்த வழக்கத்திற்கு பின்னிருக்கும் தத்துவம் யாதெனில், தேங்காயை உடைப்பது நம்முடய நான் எனும் அகந்தையை இறைவனின் முன் உடைப்பதற்கு ஒப்பானது. ஆன்மீக பாதையில் செல்கிற போது முக்தி எனும் பேரானந்த நிலையை அடைய பெரும் தடைக்கல்லாக இருப்பது நம்முடைய அகந்தையே. எனவே அகந்தையை உடைப்பதை ஒத்தது தேங்காய் உடைப்பது.

இதற்கு பின் சொல்லப்படும் மற்றொரு கருத்து யாதெனில், முன்னொரு காலத்தில் சில கிராமப்புற தெய்வங்களுக்கு ஆடு, கோழி போன்ற உயிர்பலி கொடுப்பது வழக்கமானதாக இருந்தது. உயிர் பலியை தவிர்க்கவும் அல்லது உயிர்பலிக்கு நிகரான ஒரு அம்சமாகவும் தேங்காயை கருதியதாகவும் சில செய்திகள் கிடைக்கின்றன.

தேங்காய் என்பது தீய அதிர்வுகளை ஈர்த்து கொண்டு நல்ல அதிர்வுகளை தானிருக்கும் இடத்தில் பரப்பும் நன்மை கொண்டது. அது மட்டுமின்றி ஒரிரு பகுதி என்றில்லாமல், தன்னுடைய அனைத்து பகுதிகளாலும் நன்மையை மட்டுமே அனைவருக்கும் தரும் மஹாபழமே தேங்காய்.

Similar News