புரட்டாசி சனிக்கிழமையின் சைவ விரதத்தின் அவசியம் என்ன? ஆச்சர்ய தகவல் !

Update: 2021-10-16 00:30 GMT

விஷ்ணு பெருமான்மும்மூர்த்திகளில் ஒருவர் ஆவார். பிரம்ம தேவனால் படைக்கப்பட்ட இந்த பிரபஞ்சத்தை காப்பவராகவிஷ்ணு பெருமான் இருக்கிறார். அவருக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுவது புரட்டாசி.தமிழ் மாதங்களில் ஆறாவதாக வரும் இந்த மாதத்தில் பெரும்பாலான இடங்களில் கோவிந்தரின்புகழ் பாடப்படுவதை நாம் கேட்க முடியும். புரட்டாசி மாதம்என்பது இந்து மரபில் பல வகையில் சிறப்பு வாய்ந்த மாதமாகும். இந்த மாதத்தை வட இந்தியாவில்அஸ்வின் மாதம் என்பார்கள்.

மேலும் இந்த மாதத்தில் மறைந்துவிட்ட  முன்னோர்களை நினைத்து, அவர்களுக்கு நன்றிசொல்லும் விதமாகவும் அவர்களை நிறைவு செய்யும் விதமாகவும் அவர்களுக்கு படையல் இடப்படுவதுவழக்கம். குறிப்பாக புரட்டாசியில் வரும் மாகல்ய அமாவாசையில் இதை செய்வார்கள். அதுமட்டுமின்றிஅம்பிகையை கொண்டாடும் நவராத்திரி பண்டிகையும் இந்த புரட்டாசி மாதத்தில் வருகிறது.ஒன்பது நாட்களும் அம்பிகையின் ஒன்பது அம்சங்களை வணங்குவது வழக்கம். அனைத்தை காட்டிலும்புரட்டாசி என்பது வெங்கடாசலபதிக்கு மிக உகந்ததாக கருதப்படுகிறது. புரட்டாசியின் ஒவ்வொருசனிக்கிழமையும் கோவிந்தனுக்கான சிறப்பு வழிபடும் என்றாலும், திருப்பதியில் நடைபெறும்பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததுஅனைத்திற்கும்மேலாக, வீட்டில் இருக்கும் பெரியவர்கள் புரட்டாசி மாதத்தில் விரதம் இருக்க சொல்வதைநாம் கேட்டிருப்போம்.

அதுமட்டுமின்றி இன்று சமூக வலைதளங்களில் பலவற்றிலும் கூட புரட்டாசிஎன்றால் அசைவம் பெரும்பாலும் தவிர்க்கப்படுவதை சுட்டி காட்டி பல சுவாரஸ்யமான மீம்ஸ்கள்கூட வருவதுண்டு. எதற்காக புரட்டாசியில்சைவ விரதத்தை பரிந்துரைக்கின்றனர் என்கிற கேள்வி அனைவருக்கும் உண்டு. அடிப்படையில்ஆன்மீக ரீதியாக இது ஒரு சுயகட்டுபாடு மற்றும் சுய ஒழுக்கத்தை வழங்குவதோடு மனம், உடல்மற்றும் ஆன்மாவை சுத்திகரிக்கிறது. ஆனால் நம் முன்னோர்கள் அறிவியல் காரணத்தோடே ஆன்மீகத்தைஅணுகியிருக்கிறார்கள். அந்த வகையில் சைவ விரதத்திற்கான அறிவியல் காரணம், இந்த புரட்டாசிமாதம் வெயில் காலத்திற்கும் மழை காலத்திற்கும் இடைப்பட்ட மெல்ல குளுமை படர தொடங்கும்காலம். இந்த காலத்தில் பெரும்பாலனவர்கள் காய்ச்சல், சளி போன்ற தொற்றுகள் அதிகரிப்பதுவழக்கம். குறிப்பாக குழந்தைகளுக்கு எனவே இப்படியான ஒரு காலத்தில் உடலில் உள்ள நச்சுக்களைநீக்குவது அவசியம் அதற்கு அசைவத்தை காட்டிலும் சைவம் உகந்தது என்ற அடிப்படையிலேயே சைவவிரதத்தை நம் முன்னோர் பரிந்துரைத்தனர்.   


Tags:    

Similar News