சங்கடம் தீர்க்கும் சரஸ்வதி வழிபாடு!
நவராத்திரியில் வரக்கூடிய சரஸ்வதி தேவியின் வழிபாட்டையும் பின்பற்ற வேண்டிய முறை பற்றியும் காண்போம்.
கிருதயுகத்தில் சுகேது என்ற ராஜா நல்ல முறையில் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவர் மனைவி சுதேவியும் மிகுந்த பக்தி கொண்டவளாக திகழ்ந்தாள். இவர்கள் மேல் பகை கொண்ட உறவினர்கள் ஒன்று சேர்ந்து பெரும் படையுடன் வந்து போரிட்டனர். எதிர்பாராத உறவினர்களின் துரோகத்தால் போரில் சுகேது தோற்று விட்டார். தோல்வியின் காரணமாக சுகேது தன் மனைவியுடன் காட்டிற்கு செல்ல நேரிட்டது. காட்டிற்குள் வசித்து வந்த ஆங்கிரஸ முனிவரை சுகேதுவும் அவரது மனைவியும் சந்தித்து ஆசி பெற்றனர்.
அந்த தம்பதியரின் துன்பங்களை அறிந்த முனிவர் அவர்களை பஞ்சவடி என்ற ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்களை நவராத்திரி அன்று கடைசி மூன்று நாட்கள் முறைப்படி சரஸ்வதியயை பூஜை செய்ய சொன்னார். ஆங்கிரச முனிவருக்கு பலவித தானங்களும் செய்தார்கள். பின் மன்னனம் அவரது மனைவியும் அங்கேயே தங்கியிருந்தனர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
ஆங்கிரச முனிவர் அந்த குழந்தைக்கு சூரிய பிரதாபன் என பெயரிட்டார். அந்தப் பிள்ளை வளர்ந்து முனிவரிடம் சகல்களிலும் கற்று சரஸ்வதி தேவி அருளால் தன் தந்தையின் எதிரிகளை போரில் வென்று இழந்த தேசத்தை மீண்டும் பெற்றான். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும் அடுத்த மூன்று மாத நாட்கள் லட்சுமி தேவியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் பூஜிக்க வேண்டும் புத்தகத்திலும் படத்திலோ சரஸ்வதி தேவியை ஆவாகனம் செய்து தியானித்து பூஜிக்க வேண்டும். இதுவும் முடியாவிட்டால் கடைசி நாளான ஒன்பதாவது நாளில் மட்டுமாவது சரஸ்வதியை கட்டாயம் பூஜிக்க வேண்டும். மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பூஜை அறையில் சரஸ்வதி படத்திற்கு சந்தானம், குங்குமம், பூவால் அலங்காரம் செய்ய வேண்டும்.
இரு பக்கங்களிலும் மனையின் மீது புத்தகங்களை அடுக்கி வைத்து மலர்கள் சந்தனம், வஸ்திரமாகியவற்றால் அலங்கரித்து இசைக்கருவிகள் மற்றும் ஆயுதங்கள் வைத்து சரஸ்வதியை பூஜிக்க வேண்டும். மேலும் நவராத்திரி ஏழாவது நாள் மூல நட்சத்திரத்தில் சரஸ்வதியை ஆவாகனம் செய்து ஒன்பதாவது நாள் உத்திராடம் நட்சத்திரத்தில் பூஜையை முடிப்பது நன்மை தரும் . மூல நட்சத்திர தீபம் என்பது நவராத்திரி சமயத்தில் சரஸ்வதி ஆவாகனம் செய்யும்போது ஏற்றும் ஒரு அகண்ட தீபமாகும். இந்த தீபமானது சரஸ்வதி வழிபாடு முடியும் வரையிலும் அணையாமல் இருந்து கொண்டிருக்க வேண்டும்.