சிவபெருமானின் 64 விதமான வெளிபாடுகளில் முக்கியமானது பைரவர் அவதாரம். பைரவர் எனும் வார்த்தை சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. பிரு எனும் வார்த்தைக்கு சமஸ்கிருத்ததில் மிகவும் அச்சம் நிறைந்த என்று பெயர். பைரரின் ரூபம் சற்று அச்சமூட்டுவதாக இருந்தாலும் அவர் பக்தர்களை அன்னையென அரவணைத்து காப்பவராகவே இருக்கிறார். கருமை நிறத்தில், நாயை தனது வாகனமாக ஏற்று நின்ற வடிவில் அருள் பாலிப்பார். கையில் உடுக்கையும் திரிசூலமும், மண்டைஓடும் தரித்திருப்பார்.
எதிர்மறையான எண்ணங்கள், தாக்கங்களிலிருந்து பக்தர்களை அரணென காப்பவராக பைரவர் விளங்குகிறார். பெரும்பாலான சிவாலயங்களில் பைரவருக்கென தனி சந்நிதி உண்டு. புராணங்களின் படி முப்பெரும் தேவர்களில் யார் பெரியவர் என்ற விவாதம் வந்த போது விஷ்ணு பரமாத்மா சிவபெருமான் தான் பெரியவர் என்பதை ஒப்பு கொண்டார். ஆனால் பிரம்மதேவர் ஒப்பு கொள்ளாமல் தவறான பொய்களை கூறியதால் மிகவும் சினம் கொண்ட சிவபெருமான் பைரவராக அவதரித்து பொய்யுரைத்த பிரம்மதேவரின் ஐந்தாம் தலையை வெட்டினார். என்பது புராணக்கதை.
பைரவர் என்றாலே கால பைரவரை மட்டுமே பெரும்பாலனவர்கள் கருதுகின்றனர். பைரவரில் பல ரூபம் உண்டு. அசிட்டங்க பைரவர் எழுத்தாளர்கள், கலைத்துறையில், படைப்புத்துறையில் இருப்பவர்கள் இவரை வணங்கினால் மிகவும் சிறப்பு.
குரு பைரவர் ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு உகந்தவர். சண்ட பைரவர் தைரியத்தை நல்கி, எந்தவொரு சவாலையும் வெற்றி கொள்ள செய்பவர். உம்மத்த பைரவர் மன அழுத்தம், கவலை போன்றவற்றை போக்கி நல்ல மனநலத்தை அருளக்கூடியவர்.