யமுனை நதியினை தெய்வமாக பாவித்து அமைந்திருக்கும் கோவில் தான் யமுனோத்திரி !

Update: 2021-10-10 00:00 GMT
யமுனை நதியினை தெய்வமாக பாவித்து அமைந்திருக்கும் கோவில் தான் யமுனோத்திரி !

நதிகளை தெய்வமாக வணங்கும் மரபு நம்முடையது. அந்த வகையில் நம் நாட்டின் புனித நதிகள் பலவற்றுள், மிக முக்கியமானது கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி. இதில் யமுனை நதியினை தெய்வமாக பாவித்து அமைந்திருக்கும் கோவில் தான் யமுனோத்திரி. யமுனோத்ரி கோவில் கார்வால் மலைதொடர்ச்சியில், உத்திரகண்ட் மாநிலத்தில், உத்தரகாசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. உத்திரகண்டின் முக்கிய நகரங்களான ரிஷிகேஷ், ஹரித்வார் , டெஹரடூன் ஆகிய பகுதிகளிலிருந்து இந்த கோவிலை சென்று சேர முழுமையாக ஓர் இரவு தேவை. மேலும் இந்த கோவிலை அடைய வேண்டும் என 13 கி.மீ நடந்து கடக்க வேண்டும். இந்த பயணத்தில் நாம் ஏராளமான சிறு நீர்வீழ்ச்சிகளை காண முடியும்.

இந்த இடத்தை இரண்டு வழிகள் உண்டு. ஒன்று ஹனுமன் சட்டியிலிருந்து யமுனோத்ரி இந்த வழியில் மார்கண்டேய தீர்த்தை கடக்க வேண்டியிருக்கும். இங்கு தான் மார்கண்டேய முனி மார்கண்டயே புராணத்தை எழுதினார் என்பது நம்பிக்கை. மற்றொரு வழி கார்சாலி எனும் இடம் வழியாக செல்ல வேண்டும்.

இன்று இருக்க கூடிய கோவில் கடந்த 19 ஆம் நூற்றாண்டில் புணரமைக்கப்பட்டது. காரணம் இதற்கு முன்பு இருந்த கோவில் பனிப்பொழுவாலும், வெள்ளத்தாலும் சேதப்படுத்தப்பட்டது. இந்த கோவில் அக்ஷய தீர்த்தம் அதாவது மே மாதத்தில் திறக்கப்பட்டு யம திவித்யா அதாவது அக்டோபர் – நவம்பரில் வரும் தீபாவளி பண்டிகைக்கு இரு நாட்களுக்கு பிறகு நடை மூடப்படும். இந்த கோவிலில் மிக அதிசயமாக இரண்டு வெந்நீர் ஊற்றுகள் உண்டு இந்த கோவிலை நோக்கி வரும் பக்தர்களுக்கு ஒரு புத்துணர்வான உணர்வை இந்த ஊற்று வழங்கும். இது எந்த அளவு சூடு என்றால், இந்த வெந்நீரின் சூட்டில் அரிசி மற்றும் உருளை கிழங்கை சமைக்க முடியும். சூரிய குண்டம் மற்றும் கவுரி குண்டம் என்பது குளியலுக்கு ஏற்றது.

இந்தியில் ஒரு புனித வார்த்தை உண்டு. சார் தம் என்பார்கள். ஆன்மீக பயணத்தின் பெயர் தான் இது. இதில் சார் என்பது நான்கு என்பதை குறிக்கும். பத்ரிநாத் கோவில், கேதார்நாத் கோவில், கங்கோத்ரி கோவில் மற்றும் யமுனோத்ரி கோவில் இந்த நான்கு கோவில்கள் தரிசித்து முடிப்பதையே சார் தம் யாத்திரை என்று அழைக்கின்றனர்.

Image : Uttrakhand Tourism

Tags:    

Similar News