மும்பை இன்டியன்ஸ். அணியிடம் வீழ்ந்தது சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி.!

Update: 2021-04-18 07:15 GMT

14வது ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குவிண்டன் டி காக் 40 ரன்களும், ரோஹித் சர்மா 32 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.


இதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய கீரன் பொலார்டு 22 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 150 ரன்கள் எடுத்தது.ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக முஜிபுர் ரஹ்மான் மற்றும் விஜய் சங்கர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


இதனையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் 36 ரன்களும், ஜானி பாரிஸ்டோ 43 ரன்களும் எடுத்து சிறப்பான துவக்கம் கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் (28) மற்றும் விராட் சிங் (11) ஆகியோரை தவிர மற்ற அனைத்து வீரர்களும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து அடுத்தடுத்து வெளியேறியதால் 19.4 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஹைதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வியும் அடைந்தது.

Tags:    

Similar News