14வது ஐபிஎல் சீசனின் 12வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 188 ரன்கள் குவித்துள்ளது. சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் அதிரடியாக விளையாடினார்கள்.
ஆனால் விரைவிலயே விக்கெட்களை இழந்தனர். இதில் டூபிளெசிஸ் அடித்த 33 ரன்களே அதிகபட்சமாக இருக்கிறது.இதையடுத்து மொயின் அலி 26 ரன்கள், ராயுடு 27 ரன்கள் , தோனி 18 ரன்கள் குவித்துள்ளார்கள். இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் மொத்தம் 11 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார்கள். இதில் சேதன் சாகரியா 3 விக்கெட்கள் மற்றும் கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்கள். தற்போது 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி ராஜஸ்தான் களமிறங்கியது.ஆனால் பட்லரை தவிர அனைத்து பேட்ஸ்மங்களும் தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்களை இழந்து 143 ரன்கள் மட்டுமே குவித்தனர். ராஜஸ்தான் அணி சார்பாக ஜோஸ் பட்லர் அடித்த 49 ரன்களே அதிகபட்சமாக இருக்கிறது.
சிஎஸ்கே பவுலர்கள் மொயின் அலி 3 விக்கெட்கள், ரவிந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இருக்கின்றனர். இதுபோக ஜடேஜா 4 கேட்ஸ்களை பிடித்து அசத்தினார். இதன்மூலம் சிஎஸ்கே அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சிஎஸ்கேவின் இந்த இரண்டாவது வெற்றியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நேற்று வரை நான்காவது இடத்தில் இருந்த சிஎஸ்கே இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி மூன்றாவது இடத்திலும், நடப்பு சாம்பியனான மும்பை அணி நான்கவது இடத்திலும் இருக்கிறது.