வலுவான மும்பை இன்டியன்ஸ் அணியை வீழ்த்தியது பஞ்சாப் அணி ‌!

Update: 2021-04-24 07:00 GMT

14வது ஐபிஎல் சீசனின் நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.


இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அந்த அணியின் கேப்டனான ரோஹித் சர்மா 63 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்த வெளியேறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி மற்றும் ரவி பிஸ்னோய் தலா இரண்டு விக்கெட்டை கைப்பற்றினர்.இதனையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு வழக்கம் போல், கே.எல் ராகுலும் , மாயன்க் அகர்வாலும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.


போட்டியின் முதல் ஓவரில் இருந்தே மும்பை இந்தியன்ஸின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்ட இந்த கூட்டணி மளமளவென ரன்னும் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த கூட்டணி 53 ரன்கள் எடுத்திருந்த போது மாயன்க் அகர்வால் (25) விக்கெட்டை இழந்தார்.இதன்பிறகு களத்திற்கு வந்த அதிரடி நாயகன் கிரிஸ் கெய்ல், கே.எல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதி வரை ஆட்டமிழக்காத இந்த கூட்டணி மும்பை இந்தியன்ஸின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு மளமளவென ரன்னும் குவித்ததன் மூலம் 17.4 ஓவரிலேயே இலக்கை எட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.

Tags:    

Similar News