சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கோபத்திற்கான காரணத்தை கூறிய ரஸல்.!

Update: 2021-04-24 08:30 GMT

14வது ஐபிஎல் சீசனில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 220 ரன்கள் குவித்திருந்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக டூபிளசிஸ் 95 ரன்கள் எடுத்திருந்தார்.இதனையடுத்து 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முதல் 31 ரன்களுக்கே முதல் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. இயன் மோர்கன், ராகுல் த்ரிபாதி, ராணா என மிக முக்கிய வீரர்கள் விரைவாக விக்கெட்டை இழந்துவிட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசால்டாக அபார வெற்றி பெறும் என எதிர்பார்கப்பட்ட நிலையில் களத்திற்கு வந்த ஆண்ட்ரியூ ரசல் சென்னை அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்து மளமளவென ரன் குவித்தார்.


ஆண்ட்ரியூ ரசலின் காட்டடியால் போட்டி கொல்கத்தா அணியின் கைவசம் சென்றிருந்த நிலையில், சென்னை அணியின் சுட்டி குழந்தையான சாம் கர்ரான் வீசிய ஒரு பந்தை தவறாக கணித்த ஆண்ட்ரியூ ரசல் அதில் ஸ்டெம்ப்பையும் பறிகொடுத்தார். தேவை இல்லாமல் விக்கெட்டை பறிகொடுத்ததால் விரத்யின் உச்சத்திற்கு சென்ற ஆண்ட்ரியூ ரசல் கடும் கோவத்துடன் களத்தில் இருந்து வெளியேறினார், களத்தில் இருந்து வெளியேறிய ரசல், டிரசிங் ரூமிற்கு செல்லாமல் படியிலேயே கடும் கோவத்துடன் நீண்ட நேரம் அமர்ந்திருந்தார்.சென்னை அணிக்கு எதிரான இந்த போட்டியில் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், தான் டிரசிங் ரூமிற்கு செல்லாமல் படியிலேயே அமர்ந்திருந்தது ஏன் என ஆண்ட்ரியூ ரசலே ஓபனாக தெரிவித்துள்ளார்.இது குறித்து ஆண்ட்ரியூ ரசல் பேசுகையில், "என்னால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை. பந்தை முழுவதுமாக விட்டு போல்டாகி விக்கெட் இழப்பதை எப்படி ஒரு பேட்ஸ்மேனால் ஏற்று கொள்ள முடியும். டிரசிங் ரூமிற்கு சென்று எனது சக வீரர்களை எப்படி சந்திப்பேன் என்று என தெரியாமால் தான் படியிலேயே அமர்ந்திருந்தேன். போட்டியை முடித்து கொடுக்காமல், வந்த வேலையையும் சரியாக செய்யாமல் எப்படி டிரசிங் ரூமிற்கு செல்ல முடியும்.


ஆனால் நம்பிக்கை இழந்துவிடவில்லை. வேலையை முடிக்காமல் மிக மோசமாக விக்கெட்டை இழந்தால் கோவம் தான் அதிகம் வரும், ஆனால் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் நான் அவுட்டான விதம் எனக்கு கோவத்தை உண்டாக்கவில்லை, மாறாக அதிகம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். எனது இதயமே நொறுங்கி விட்டதை போன்று உணர்ந்தேன்" என்றார்.

Tags:    

Similar News