ஆர்சிபி அணியை வெறுத்து வாங்கிய ரவிந்திர ஜடேஜா.!

Update: 2021-04-26 06:45 GMT

14வது ஐபிஎல் சீசனின் 19வது லீக் போட்டி இன்று (ஏப்.25) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிஙஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.சிஎஸ்கே தொடக்க வீரர்கள் ருத்ராஜ் மற்றும் டூபிளெசிஸ் 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அதே நேரத்தில் ரவிந்திர ஜடேஜா கடைசி ஓவரில் 37 ரன்கள் அடித்து சிறப்பான முடிவை கொடுத்தார்.


இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 4 விக்கெட்களை இழந்து 191 ரன்கள் குவித்தது.ஆர்சிபி பவுலர் ஹர்ஷல் பட்டேல் வழக்கம் போல் 3 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதன்பிறகு 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி சிஎஸ்கே பவுலர்களிடம் சரணடைந்தனர். சிறப்பான தொடக்கத்தை கொடுத்த படிக்கல் 15 பந்தில் 34 ரன்கள் அடித்து ஷர்துல் தாகூரிடம் விக்கெட் இழந்தார்.


இதன்பிறகு களமிறங்கிய அனைவரும் தொடர்ந்து விக்கெட் இழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 122 ரன்கள் மட்டுமே குவித்து இந்த சீசனில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது. சிஎஸ்கே பவுலர்கள் ரவிந்திர ஜடேஜா 3 விக்கெட்கள் மற்றும் இம்ரான் தாஹிர் 2 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கின்றனர். மேலும், இவர்கள் இருவம் தலா ஒரு ரன் அவுட்டும் செய்திருக்கிறார்கள்.இதையடுத்து பவுலிங்கில் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். பீல்டிங்கில் ஸ்டம்பை குறி பார்த்து அடித்து டேனியல் கிறிஸ்டியனை ரன் அவுட் செய்திருக்கிறார். இதன்மூலம் ஆட்டநாயகன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

Tags:    

Similar News