14வது ஐபிஎல் சீசனில் 20வது போட்டியான இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ப்ரித்வி ஷா 53 ரன்களும், ரிஷப் பண்ட் 37 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத ஸ்டீவ் ஸ்மித் 34 ரன்களும் எடுத்து கை கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த டெல்லி அணி 159 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் 6 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான பாரிஸ்டோ 38 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் கேன் வில்லியம்சனை தன்னந்தனியாக போராடவிட்டு அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.ஒருபுறம் விக்கெட்டை மளமளவென சரிந்தாலும், கேன் வில்லியம்சன் இறுதி வரை போராடியதன் மூலமும், 19வது ஓவரில் களமிறங்கிய சுசித் ஜெகதீசா என்னும் இளம் வீரர் திடீரென இரண்டு பவுண்டரிகள் அடித்ததாலும் கடைசி ஒரு ஓவரில் ஹைதராபாத் அணியின் வெறிக்கு 16 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.
கடைசி ஓவரில் ஹைதராபாத் அணி 15 ரன்கள் மட்டும் குவித்ததால் இரு அணிகள் இடையேயான இந்த போட்டி டிராவில் முடிந்தது.இதனையடுத்து போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கு போடப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 8 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது சூப்பர் ஓவரை எதிர்கொண்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணி, தட்டு தடுமாறி கடைசி பந்தில் வெற்றி பெற்றுள்ளது.