டெல்லி அணியை வீழ்த்தி மீண்டும் முதல் இடத்தை பிடித்தது ஆர்சிபி அணி.!

Update: 2021-04-28 01:30 GMT

ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு விராட் கோலி (12) மற்றும் தேவ்தட் படிக்கல் (17) போன்ற வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தாலும், கடைசி நேரத்தில் டிவில்லியர்ஸ் காட்டடி அடித்து 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 171 ரன்கள் குவித்தது.


இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான ஷிகர் தவான் 6 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார், மற்றொரு துவக்க வீரரான ப்ரித்வி ஷா 21 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்னிலும், ஸ்டோய்னிஸ் 22 ரன்னிலும் நடையை கட்டினர்.இதன்பிறகு கூட்டணி சேர்ந்த ரிஷப் பண்ட் – சிம்ரன் ஹெய்ட்மர் ஜோடி பெங்களூர் அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு ரன் சேர்த்தது. இதில் குறிப்பாக சிம்ரன் ஹெய்ட்மர் சிம்ரன் ஹெய்ம்டர் 23 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் கடைசி ஒரு ஓவருக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலை டெல்லி அணிக்கு ஏற்பட்டது.


வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் முகமது சிராஜ் வீசிய கடைசி ஓவரில் டெல்லி அணியால் இரண்டு பவுண்டரிகள் அடித்து 10 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் டெல்லி அணி வெறும் 1 ரன்னில் வெற்றியை தவறவிட்டுள்ளது.

Tags:    

Similar News