டெல்லி அணியின் தோல்விக்கான காரணத்தை கூறிய ரிஷப் பண்ட்.!

Update: 2021-04-28 07:45 GMT

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்பதால் இந்த போட்டி நேற்று பரபரப்பாக நடைபெற்றது. முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது.பெங்களூர் அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க டிவிலியர்ஸ் எப்போதும்போல பெங்களூர் அணிக்காக தனி ஒருவனாக நின்று 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து பெங்களூர் அணியை கரை சேர்த்தார்.


அவருக்கு துணை நின்ற படித்தார் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் ஓரளவு சமாளித்து விளையாடினார். இந்நிலையில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி துவக்கத்திலேயே தவான் விக்கெட்டை இழந்தது.அதன்பின்னர் ரிஷப் பண்ட் உடன் இணைந்த ஹெட்மையர் தனது அதிரடி வெளிப்படுத்தி பெங்களூர் அணிக்கு பயம் காண்பித்தார். கிட்டத்தட்ட வெற்றியின் அருகில் கொண்டு சென்ற ரிஷப் பண்ட் மற்றும் ஹெட்மையர் ஜோடி கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அவர்களால் 12 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது இதன் காரணமாக டெல்லி அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.



இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் தோற்றது வருத்தமாக இருக்கிறது. இந்த மைதானத்தில் பெங்களூரு அணி 10 முதல் 15 ரன்கள் வரை அதிகமாக எடுத்து விட்டார்கள். ஹெட்மையர் இன்றைய போட்டியில் சிறப்பான இன்னிங்சை வெளிப்படுத்தினார். அவரால் மட்டுமே நாங்கள் இந்த டார்கெட்டிற்கு மிக அருகில் சென்றோம். இறுதி ஓவரின் போது யார் பந்து வீசினாலும் போட்டியை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்று நினைத்தோம் ஆனால் இறுதியில் சிராஜ் சிறப்பாக பந்து வீசியதால் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துவிட்டோம் என பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News