நேற்றைய போட்டியில் பல சாதனைகளை படைத்த டேவிட் வார்னர்.!

Update: 2021-04-29 06:45 GMT

14வது ஐபிஎல் சீசனின் 23வது லீக் போட்டி நேற்று டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி பவர்ளேவில் 39 ரன்கள் குவித்து பேர்ஸ்டோவின் விக்கெட்டை இழந்து இருந்தது. இதன்பிறகு டேவிட் வார்னர் 57 ரன்களும் மனிஷ் பாண்டே 61 ரன்களும் குவித்தன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் குவித்தது ஹைதராபாத். இதில் சிஎஸ்கே பவுலர் லுங்கி நெகிடி 2 விக்கெட்கள் மற்றும் சாம் கரன் 1 விக்கெட் எடுத்திருக்கிறார்கள்.


இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ருத்ராஜ் மற்றும் டூபிளெசிஸ் அதிரடியாக விளையாடி 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த போட்டியில் ருத்ராஜ் 71 ரன்களும் டூபிளெசிஸ் 56 ரன்களும் குவித்து இருக்கிறார்கள்.இறுதியாக 18.3 ஓவரில் சிஎஸ்கே 173 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் சார்பாக ரஷித் கான் மட்டும் 3 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதன்மூலம் சிஎஸ்கே மீண்டும் புள்ளி பட்டியலில் 10 (+1.475) புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து அசத்தியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 55 பந்தில் 57 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். இதன்மூலம் பல சாதனைகளை படைத்திருக்கிறார்.


*டி20ல் 10000 ரன்கள் கடந்த ஐந்தாவது வீரர் என்று சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு முன் கிறிஸ் கெய்ல், கீரோன் பொல்லார்ட், மற்றும் ஷோயப் மாலிக் இந்த சாதனையை படைத்திருக்கிறார்கள். *200 சிக்ஸர்கள் அடித்த 8வது வீரர் என்றும் 4வது வெளிநாட்டு வீரர் என்று சாதனை படைத்திருக்கிறார். *டேவிட் வார்னர், ஹைதராபாத் அணிக்காக 4000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்று சாதனை படைத்திருக்கிறார். 

Tags:    

Similar News