ராஜஸ்தான் அணியை வீழ்த்தி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியது மும்பை அணி!
14வது ஐபிஎல் சீசனின் 24வது லீக் போட்டி இன்று டெல்லி அருன் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் வார்னர் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி பவர்பிளேவில் விக்கெட் ஏதும் இழக்காமல் 47 ரன்கள் குவித்திருந்தது. இதன்பிறகு பட்லர் 41 ரன்களும், ஜெஸ்வால் 32 ரன்களும், சஞ்சு சாம்சன் 42 ரன்களும், சிவம் டூபே 35 ரன்களும் குவித்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் குவித்தனர்.
மும்பை பவுலர் ராகுல் சஹார் 2 விக்கெட்கள் மற்றும் போல்ட், பும்ரா தலா 1 விக்கெட் எடுத்து இருக்கிறார்கள். 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய முய்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்னில் விக்கெட் இழக்க பவர்பிளேவில் 1 விக்கெட் இழந்து 49 ரன்கள் குவித்தனர்.இதன்பிறகு அதிரடியாக விளையாடிய டீகாக் 70 ரன்களும் குர்னால் பாண்டியா 39 ரன்களும் குவித்ததன் மூலம் 18.3 ஓவரில் 172 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் சார்பாக கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்கள் மற்றும் முஸ்தாபிசுர ரஹ்மான் 1 விக்கெட் எடுத்திருக்கிறார். இதன்மூலம் மும்பை பல சாதனைகளை செய்து இருக்கிறது.*இந்த வெற்றியின் மூலம், மும்பை இந்தியன்ஸ் இப்போது ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 12 வெற்றிகளையும் 12 தோல்விகளையும் பெற்றுள்ளது.