ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்காக சொந்த நாட்டையே தூக்கி எறிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் - இந்தியாவில் நுழைய போடப்பட்ட மாஸ்டர் பிளான்!
பாகிஸ்தான் வீரர்கள், ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அரசாங்கமும், பிசிசிஐயும் தடை விதித்துள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமிர் இந்தியாவில் விளையாட திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
17 வயதிலேயே சூதாட்டப் புகாரில் சிக்கி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டவர்அமீர். பின்னர் நன்னடத்தைக் காரணமாக சீக்கிரமே விடுதலையான அமீர் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, முன்னதாகவே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் இப்போது அவர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை வேண்டி விண்ணப்பித்துள்ளதாகவும், அந்த நாட்டிலேயே குடியேற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இவருக்கு இங்கிலாந்து குடியுரிமை கிடைத்துவிட்டால் , ஐபிஎல் தொடரிலும் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான அசார் மெஹ்மூத் , இங்கிலாந்து நாட்டின் குடியுரிமையை பெற்று ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பங்குபெற்று விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பாணியை பின்பற்றி, ஆமிர் இந்தியாவில் விளையாட திட்டமிட்டுள்ளார். முதலில் இங்கிலாந்தின் குடியுரிமையை பெற்ற பிறகுதான் , அடுத்து போட்டிகளில் பங்கேற்பது பற்றி தெரிய வரும்.